மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அடுத்தடுத்த பலி.. "சீனா வேக்சின்" போட்ட இந்தோனேசியாவில்.. பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

ஜகர்தா: கொரோனா காரணமாக இந்தோனேசியாவின் மொத்த ஹெல்த் சிஸ்டமும் குலைந்துள்ளது. அதிலும் இந்தோனேசியாவில் சீனாவின் சினோவேக் போட்டவர்கள் பலர் வரிசையாக மரணம் அடைவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    Vaccine போட்ட பின்பும் பலியான மருத்துவர்கள்.. Indonesia-வில் பலன் கொடுக்காத China-வின் Sinovac

    உலகில் சீனாவின் சினோவேக் வேக்சினை பெற்றுக்கொண்ட பல நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினோவேக் வேக்சின் கொரோனா வைரசுக்கு எதிராக போதிய அளவில் பலன் அளிக்காத காரணத்தால் மங்கோலியா, பஹ்ரைன் போன்ற நாடுகளில் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன.

    சீனாவின் சினோவேக் வேக்சினை தேர்வு செய்து அதை பயன்படுத்திய நாடுகள் எல்லாம் தற்போது 2 மற்றும் மூன்றாம் அலையை சந்தித்து வருகின்றன. சினோவேக் கொரோனா பரவலை எந்த வகையில் தடுக்கவில்லை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.

    இந்தோனேசியா

    இந்தோனேசியா

    இதில் இந்தோனேசியாவின் நிலைமைதான் மிக மோசமாகி உள்ளது. இந்தோனேசியாவில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேலானவர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 2 லட்சம் ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர். இந்த பரவல் தொடங்கியதில் இருந்து, இந்தோனேசியாவில் தற்போதுதான் அதிக ஆக்டிவ் நோயாளிகள் உள்ளனர்.

     90 சதவிகிதம்

    90 சதவிகிதம்

    இந்தோனேசியாவின் மொத்த சுகாதாரத்துறையும் குலையும் அளவிற்கு தினமும் ஆயிரம் ஆயிரமாக நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். 90% மருத்துவமனைகள் இந்தோனேசியாவில் நிரம்பிவிட்டன. கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு அங்கு ஏற்பட்டுள்ளது. பெட் இல்லாமல் மரத்தடியில் மக்கள் சிகிச்சை பெறும் கொடுமை கூட ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டாம் அலை எப்படி தாக்கியதோ அதற்கு இணையாக இந்தோனேசியாவில் தாக்கி உள்ளது.

    மருத்துவர்கள்

    மருத்துவர்கள்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தோனேசியாவில் சினோவேக் வேக்சின் போடப்பட்டு வருகின்றது. அங்கு வேக்சின் போட்டவர்களும் அடுத்தடுத்து பலியாகி வருகிறார்கள். முக்கியமாக சினோவேக் வேக்சின் போட்டவர்கள் பலர் கொரோனா பாதிக்கப்பட்டு அல்லது மற்ற உடல் குறைபாடுகள் ஏற்பட்டு அடுத்தடுத்து பலியாகி வருகிறார்கள். இதுவரை அங்கு சினோவேக் வேக்சின் போட்ட 20 மருத்துவர்கள் கடந்த சில நாட்களில் பலியாகி விட்டனர்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    இன்னும் 31 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இவர்களுக்கு வேக்சின் கொடுக்கப்பட்டதா என்று சோதனை நடந்து வருகிறது. பொதுவாக வேக்சின் போட்டால் மருத்துவமனையில் சேர வேண்டிய நிலைமை வராது. ஆனால் இந்தோனேசியாவில் சினோவேக் வேக்சின் போட்டுகொண்ட டாக்டர்கள் சிலர் அடுத்த நாளே கொரோனா தாக்கி 2-3 நாட்களில் பலியாகும் கொடூரம் ஏற்பட்டுள்ளது.

    மொத்தம்

    மொத்தம்

    இது மட்டுமின்றி 6 நர்ஸ்கள் இந்தோனேசியாவில் சினோவேக் வேக்சின் போட்ட பின் பலியாகி உள்ளனர். மயங்கி விழுந்து மறுநாளே கொரோனா பாதிக்கப்பட்டு பின் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளனர். 358 முன்கள பணியாளர்கள் இந்தோனேசியாவில் இரண்டு டோஸ் சினோவேக் வேக்சின் போட்டபின்பும் கூட கொரோனா பாதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பலர்

    பலர்

    இந்தோனேசியாவில் 5%க்கும் குறைவான மக்கள்தான் வேக்சின் போட்டுகொண்டுள்ளனர். அதில் பெரும்பாலான மக்கள் சினோவேக் வேக்சின் போட்டுக்கொண்டவர்கள். இந்த வேக்சின் கொரோனாவை தடுக்கவில்லை. ஏன் கொரோனா மரணத்தை கூட தடுக்கவில்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது.

    டெல்டா

    டெல்டா

    இதனால் விரைவில் இந்தோனேசியா இந்த வேக்சினை கைவிட வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் இந்தோனேசியாவில் டெல்டா வகை கொரோனா அதிகம் பரவுகிறது. இந்த கொரோனாவிற்கு எதிராக சினோவேக் வேக்சின் பயன் அளிக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+