இந்தோனேசியாவில் 2 குழந்தைகள் உள்பட 10 பேருடன் கிளம்பிய விமானம் மாயம்
ஜகார்தா: இந்தோனேசியாவில் 10 பேருடன் கிளம்பிய சிறிய ரக விமானம் சுலாவெசி தீவில் மாயமாகியுள்ளது.
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் உள்ள மசாம்பாவில் இருக்கும் விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான நிறுவனமான ஏவியஸ்டருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் 10 பேருடன் கிளம்பியது. 2 குழந்தைகள் உள்பட 7 பயணிகள், 3 விமான ஊழியர்களுடன் விமானம் மகாசாருக்கு கிளம்பியது.

இந்நிலையில் விமானம் கிளம்பிய வேகத்தில் ரேடாரில் இருந்து மாயமாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விமானத்தை தேட மீட்பு குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விமானம் கிளம்பிய 7வது நிமிடத்தில் ரேடாரில் இருந்து மாயமானதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜூலியஸ் பராடா தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தோனேசியாவில் மூன்று விமான விபத்துகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ராணுவ போக்குவரத்து விமானம் சுமத்ராவில் உள்ள மேடனில் இருக்கும் குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 140 பேர் பலியாகினர். அந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து 54 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது.
கடந்த டிசம்பர் மாதம் ஏர்ஏசியா விமானம் ஜாவா கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 192 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications