இந்தோனேசிய விமான விபத்து.. 189 பேர் பலியாக காரணம் என்ன?.. ஜாவா கடலில் கிடைத்தது பிளாக் பாக்ஸ்
ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளான இந்தோனேசியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜகர்த்தா: ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளான இந்தோனேசியா விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவை சேர்ந்த லயன் ஏர்லைன்ஸ் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்திற்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. லயன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஜேடி610 விமானம்தான் கடலில் விழுந்தது.
கடந்த அக்டோபர் 29ம் தேதி இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் இருந்து சுமத்ரா தீவில் உள்ள பங்கல் பினாங் நகரம் நோக்கி இந்த விமானம் சென்றது. விமானம் புறப்பட்ட 13 நிமிடம் 23 நொடிகளில் காணாமல் போனது.
[சாலை தடுப்பில் மோதி பறந்த கார்.. 6 நாள் மரத்தின் மேல் "ஹால்ட்".. பத்திரமாக இறங்கி வந்த பெண்!! ]

எல்லோரும் மரணம்
அதன்பின் அந்த விமானத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை. அன்று மாலையே விமானம் ஜாவா கடலில் கண்டெடுக்கப்பட்டது. அந்த விமானத்தில் மொத்தம் 189 பயணிகள் இருந்துள்ளனர். 178 பயணிகள், ஒரு குழந்தை, 2 குழந்தைகள், 2 விமானிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்துள்ளனர். விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகிவிட்டதாக மீட்பு படையினர் அறிவித்துள்ளனர்.

கடுமையாக தேடினார்கள்
இதுவரை இந்த விபத்தில் பலியானவர்களின் சிலரின் உடல் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், இந்த விமானத்தின் கருப்பு பெட்டியை (பிளாக் பாக்ஸ்) மீட்பு படை தேடி வந்தது. இந்தோனேசிய கடற்படையின் சிறந்த டைவர்ஸ்கள் எல்லோரும் இந்த கருப்பு பெட்டியை தான் தேடி கொண்டு இருந்தனர்.

கடைசியாக கண்டுபிடித்தனர்
இந்த நிலையில்தான் இன்று காலை அந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜாவா கடலில் விமானம் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கருப்பு பெட்டியின் நிறம் ஆரஞ்சாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி முடியும்
கருப்பு பெட்டி கிடைத்துள்ளதால் விரைவில் விபத்திற்கான காரணம் தெரியும். ஆனால் இந்த கருப்பு பெட்டி விமானத்தின் டேட்டாக்களை பதிவு செய்யும் பெட்டியா இல்லை விமானிகள் பேசிக்கொள்வதை பதிவு செய்யும் பெட்டியா என்று தகவல் வெளியாகவில்லை. இதை ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்துள்ளனர் இந்தோனேசிய அதிகாரிகள்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications