ஈரான் ஏவுகணை தாக்குதலால் பதற்றம்.. கத்தாரில் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர்.. தூதரகம் தகவல்

Subscribe to Oneindia Tamil

தோஹா: இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. கத்தார் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டது. இதையடுத்து, போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் அறிவித்தார். ஆனால் ஈரான் அதனை மறுத்துள்ளது. போர் தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கத்தாரில் தற்போது பாதுகாப்பு நிலை சீராக உள்ளதாகவும், இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

காசா மீது தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல், ஈரான் பயங்கரவாதிகளுக்கு உதவி வருகிறது என்று கூறி கடந்த வாரம் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வந்தது. இந்த தாக்குதல்களால் உயிரிழப்புகளும், சேதங்களும் அதிகரித்து வந்தன. இந்த மோதலுக்குள் அமெரிக்காவும் நுழைந்ததால் கடும் பதற்றம் ஏற்பட்டது. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

Iran quatar indians

ஈரான் நாட்டின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் ஆகிய மூன்று அணு அமைப்புகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. அமெரிக்கா தாக்கி சேதப்படுத்தியது. இதையடுத்து, ஈரானும் பதில் தாக்குதலை மேற்கொண்டது.

ஈரான், கத்தாரில் தோகாவில் உள்ள அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான அல்-உதெய்த் விமான தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு கத்தார் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கத்தார் வெளியுறவுத் துறை அமைச்சகம், ஈரானின் இந்த தாக்குதல் கத்தாரின் இறையாண்மையை சிதைப்பதாகும். மேலும், வான்வெளி மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும் என்று தெரிவித்துள்ளது.

கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போது, ஈரானின் ஏவுகணைகளை தாங்கள் வெற்றிகரமாக சமாளித்ததகாவும், இந்த தாக்குதலால் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், தங்களது வான்வெளி பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஈரான் மோதலுக்கு நடுவே அமெரிக்காவும் நுழைந்ததால் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலால் கோபமடைந்த ஈரான் தனது நட்பு என்றும் பாராமல் கத்தார் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கிடையே இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், தற்போதைக்கு போர் நிறுத்தம் குறித்த எந்த ஒப்பந்தமும் இல்லை என்று ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதால் போர் தொடரும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கத்தாரில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக இந்திய தூதரகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. அந்த தகவலில், கத்தாரில் பாதுகாப்பு நிலமை சீராக உள்ளது. போர் பதற்றம் குறித்து கவலை அடைய வேண்டாம் என்று கத்தார் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+