அதிர்ச்சியின் உச்சத்தில் டிரம்ப்.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரான்! எதிர்பார்த்ததை விட நிலைமை மோசம்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: அமெரிக்கா ஈரான் இடையே நடந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இந்த போர் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர வைக்கிறது. டிரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டதை விட பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளது.

வளைகுடா போரில் ஈரான் தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவ பலத்தையே அசைத்துப் பார்த்துள்ளது. ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்திற்கு மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாம். அதாவது ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட தகவல்களை விட, அமெரிக்க ராணுவத் தளங்களுக்குப் பல மடங்கு அதிகச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

Iran attack on US Iran US Donald Trump

ஈரான் கொடுத்த ஷாக்

தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவுக்கு, ஈரானின் இந்தத் துல்லியமான பதிலடி ஒரு மிக பெரிய ஷாக் கொடுத்துள்ளது. அதாவது 15 அமெரிக்க ராணுவத் தளங்களில் உள்ள சுமார் 228 கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் ஈரானால் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் (ஆங்கிலத்தில் 5th Fleet HQ) கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. இதன் சீரமைப்புப் பணிகளுக்கு மட்டுமே 200 மில்லியன் டாலர் தேவைப்படலாம்.

குவைத்: அலி அல்-சலேம், கேம்ப் அரிஃப்ஜான் மற்றும் கேம்ப் புயரிங் ஆகிய தளங்களில் இருந்த விலை உயர்ந்த பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன.

சவுதி அரேபியா: பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில் இருந்த E-3 சென்ட்ரி கட்டளை விமானம் மற்றும் ஒரு எரிபொருள் டேங்கர் விமானம் அழிக்கப்பட்டுள்ளன.

கத்தார் & ஜோர்டான்: அல்-உடைத் தளத்தில் இருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ஜோர்டானில் இருந்த THAAD ரேடார் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் இழப்புகள்

மேலும், அமெரிக்கா சுமார் 40 ட்ரோன்கள் மற்றும் போர் விமானங்களை இழந்துள்ளது. 24 MQ-9 ரீப்பர் ட்ரோன்கள் (ஒவ்வொன்றின் விலை $30 மில்லியன்) மற்றும் ஒரு MQ-4C ட்ரைடன் ($240 மில்லியன்) அழிக்கப்பட்டுள்ளன.. 4 F-15E ஸ்ட்ரைக் ஈகிள் மற்றும் 1 A-10 வார்த்ஹாக் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும், வரலாற்றிலேயே முதல்முறையாக, 5-ம் தலைமுறைப் போர் விமானமான F-35 கூட சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் சொல்கிறது.

ஈரான் தாக்குதல்கள்

ஈரானின் ஏவுகணைகள் துல்லியமாக இலக்குகளைத் தாக்கியுள்ளன. ஈரானின் டிரோன்கள் தேவையில்லாத எந்தவொரு இடத்தையும் தாக்கவில்லையாம்.. மிகத் துல்லியமாகக் குறிவைத்தே தாக்கியுள்ளதாம். அதேநேரம் பெரும்பாலான தாக்குதல்கள் அமெரிக்க வீரர்கள் தளங்களை விட்டு வெளியேறிய பிறகே நடந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே உயிரிழப்புகள் பெரியளவில் இல்லை. அதாவது ஈரானின் இந்த தாக்குதலில் உயிரிழப்பு குறைவாக இருந்தாலும், ராணுவ சொத்து இழப்பு ஈடுகட்ட முடியாததாக உள்ளது.

அமெரிக்காவின் இழப்புகள்

போரின் உண்மையான செலவு குறித்த விவாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனல் பறக்கிறது. போர்ச் செலவு $25 பில்லியன் மட்டுமே என்று கூறியுள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை, 2027-ம் ஆண்டிற்கு $1.5 ட்ரில்லியன் பட்ஜெட்டைக் கோரியுள்ளது. இருப்பினும், இதை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சியினர் இந்த போரால் அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்தப் பாதிப்பு $630 பில்லியன் முதல் $1 ட்ரில்லியன் என எச்சரிக்கின்றனர்.

யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அதுபோல ஈரானின் மலிவான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள், அமெரிக்காவின் விலை உயர்ந்த ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை மீறிச் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது, அமெரிக்காவின் ராணுவ வியூகத்தையே மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தாலும், அதன் பொருளாதார பாதிப்புகளை அமெரிக்காவை நீண்ட காலத்திற்குப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+