'கொலைகார' இஸ்ரேல் தூதரகங்களை மூடுவோம்-பொருளாதார தடை விதிப்போம்.. இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் அழைப்பு!
தெஹ்ரான்: பாலஸ்தீனத்தில் கொடூர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மீது ஒட்டுமொத்த இஸ்லாமிய நாடுகளும் பொருளாதார தடை விதிக்க வேண்டும்; அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்தும் இஸ்ரேல் தூதர்களை வெளியேற்ற வேண்டும் என கடும் குரலில் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக பாலஸ்தீனத்தின் காஸாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ், அக்டோபர் 7-ந் தேதி பல்லாயிரக்கணக்கான ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்குள் ஊடுருவி 100க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர் ஹமாஸ் ஜிஹாதிகள். இதனால் உலக நாடுகள் ஒருசேர அதிர்ந்தன.

இஸ்ரேல் கொடூர தாக்குதல்: இதனையடுத்து ஹமாஸின் காஸா நிலப்பகுதி மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தது. காஸாவில் இருந்து பல லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியது இஸ்ரேல். இந்நிலையில் திடீரென நேற்று இரவு காஸா மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரமான விமானப் படை தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் மட்டுமே 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில் பல்லாயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் தஞ்சமடைந்திருந்தனர். இந்த மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட துயரம் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கின.
உலகம் அதிர்ந்த தாக்குதல்: இதுவரை இஸ்ரேலை ஆதரித்த நாடுகள் கூட இந்த தாக்குதலை கண்டிக்கும் வகையில் கருத்துகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேல் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகளில் இஸ்ரேல் தூதரகங்கள் முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. ஜோர்டானில் இஸ்ரேல் தூதரகம் தீக்கிரையாக்கப்பட்டது.
இஸ்ரேல் மீது பொருளாதார தடை: இதனிடையே ஒட்டுமொத்தமாக அனைத்து இஸ்லாமிய நாடுகளுமே, இஸ்ரேல் மீது பொருளாதார தடையை அறிவிக்க வேண்டும்; அனைத்து இஸ்லாமிய நாடுகளில் இருந்து இஸ்ரேலிய தூதர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என ஈரான் வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக ஓஐசி எனப்படும் Organisation of Islamic Cooperation- இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஈரான் வலியுறுத்தி உள்ளது. இதனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிரான பதற்றம் தொடருகிறது.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
நீங்கள் தனித்து விடப்படுவீங்க.. பெஞ்சமின் நெதன்யாகுவை போனில் லெஃப்ட் ரைட் வாங்கிய டிரம்ப்! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர்












Click it and Unblock the Notifications