இஸ்ரேலை விடுங்க.. அமெரிக்காவுக்கு இது மானப்பிரச்சனை! F-35 போர் விமானத்தை வீழ்த்தியதா ஈரான்?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல், அமெரிக்க தயாரிப்பான F-35 ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை பயன்படுத்தியதாகவும், அதை ஈரான் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரானின் இந்திய தூதரகமும் இந்த தகவலை பகிர்ந்திருக்கிறது. இஸ்ரேல் இதனை மறுத்திருக்கிறது. ஒருவேளை இந்த தகவல் உண்மையெனில், F-35 விமானங்களை வீழ்த்திய முதல் நாடு ஈரானாகத்தான் இருக்கும்.

"ஈரானின் வான் பாதுகாப்புப் படைகள் இரண்டு இஸ்ரேலிய F-35 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியுள்ளன. மேலும் பல ட்ரோன்களையும் இடைமறித்து அழித்துள்ளன. ஒரு பெண் விமானி கைது செய்யப்பட்டிருக்கிறார் என ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன" என்று ஈரானின் இந்திய தூதரகம் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறது. இதற்கு இஸ்ரேல் மறுப்பு தெரிவித்திருக்கிறது.

Iran Israel US

இஸ்ரேலின் மறுப்புக்கு சில நியாயமான காரணங்கள் இருக்கின்றன. உலகின் மிகவும் வலிமையான, மறைந்திருந்து தாக்கும் திறன் கொண்ட விமானங்களில் F-35 முதன்மையானதாகும். இதை தாக்கி அழிப்பது சவாலானது.

உதாரணத்திற்கு கால்பந்து விளையாட்டை எடுத்துக்கொள்வோம். எதிரணி கோல் அடிக்கப்போகிறார்கள் எனில், அவர்கள் எப்படி நகர்கிறார்கள், பந்து எங்கே வருகிறது, எந்த திசையில் கோல் அடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை கணித்துவிட முடியும். ஆனால், மைதானத்தில் எதிரணியினர் மாயாஜால வீரர்களாக இருந்தால்? பந்து நகரும்போதுதான், அந்த வீரர் எங்கு இருக்கிறார் என்பதையே கண்டுபிடிக்க முடியும். F-35 விமானம்தான் அந்த மேஜிக் வீரர்.

இந்த விமானத்தின் மேற்பகுதியில் ரேடார்களை உறிஞ்சும் தனித்தன்மை வாய்ந்த கெமிக்கல் பூசப்பட்டிருக்கும். எனவே ரேடாரில் விமானத்தை கண்டுபிடிக்க முடியாது. அதேபோல, என்ஜினிலிருந்து வெளிவரும் வெப்பமும் குறைவாக இருக்கும். எனவே அகச்சிவப்பு சென்சார்கள் (infrared sensors) கொண்டும் இதை கண்டுபிடிக்க முடியாது.

இவ்வளவு சிறப்பம்சங்களை கொண்ட விமானத்தை எப்படி வீழ்த்த முடியும் என்று இஸ்ரேல் கேள்வி எழுப்பியுள்ளது. இஸ்ரேலின் கேள்வியில் நியாயம் இருந்தாலும், F-35 விமானங்கள் வீழ்த்த முடியாதவை கிடையாது.

ஈரான் அதை செய்ததாக கூறுகிறது. ஈரானிய ஊடகங்களும் செய்தியை வெளியிட்டு வருகின்றன. ஆனால் அதிகாரிகள் தரப்பில் எந்த தகவல்களும் இன்றும் வெளியாகவில்லை. இந்த செய்தி மட்டும் உறுதியானதாக இருப்பின், அது இஸ்ரேலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். அதைவிட முக்கியம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய கவுரவ குறைச்சலான விஷயமாக இது மாறும்.

காரணம், தான் தயாரித்த ஒரு சிறப்பான விமானத்தை, இஸ்லாமிய நாடு ஒன்று முதன் முறையாக சுட்டு வீழ்த்தியிருப்பதை நிச்சயம் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியாது. சர்வதேச அளவில், அமெரிக்கை தயாரிப்பு ஆயுதங்களுக்கு இத்துடன் மவுசும் குறைந்துவிடும். இருப்பினும் இந்த செய்திக்கான உறுதியான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

போருக்கான காரணம் என்ன?

ஈரான் அணுசக்தியை பயன்படுத்த தொடங்கியது அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. இதை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. இருப்பினும் எதுவும் வேலைக்கு ஆகவில்லை. குறிப்பாக யுரேனியம் செறிவூட்டலை ஈரான் 60% வரை கொண்டு சென்றுள்ளது. இப்படியே போனால், ஈரான் அணு ஆயுதத்தை தயாரித்துவிடுமோ என்று அச்சமைந்த அமெரிக்கா, இஸ்ரேலை வைத்து அந்நாட்டை டீல் செய்து வருகிறது.

அமெரிக்காவின் உத்தரவின் பேரில்தான் ஈரானின் அணுசக்தி மையங்களின் மீது நேற்று இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராக இன்று ஈரான் பதில் தாக்கதலில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+