ஈரானை இனி கண்காணிக்க முடியாது.. நிஜமாகவே அணு குண்டு உருவாகிறதா? தெஹ்ரானிலிருந்து வெளியான ஷாக்
தெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) கண்காணிப்பில் இருந்து ஈரான் தன்னை விடுவித்துக் கொண்டிருக்கிறது. இது தொடர்பான தீர்மானம் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இன்று எல்லா நாடுகளும் அணு சக்தியை பயன்படுத்த தொடங்கிவிட்டன. ஆனால், அணுசக்தியை சரியான நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதை கண்காணிக்கும் வேலையைதான் IAEA செய்து வருகிறது. இது ஐநாவுக்கு கீழ் இயங்கி வருகிறது.

கடந்த 1958ம் ஆண்டு இந்த அமைப்பின் கண்காணிப்பில் கீழ் ஈரான் தன்னை கொண்டு வந்தது. அதன்படி, ஈரானில் உள்ள அணுசக்தி அமைப்புகளை ஆய்வு செய்வும், சோதனை செய்யவும் IAEAக்கு உரிமை இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இது மேற்கொண்டு வந்த ஆய்வில் ஈரானிடம் அணு ஆயுதம் இல்லை என்றுதான் கூறி வந்தது. இது டிரம்புக்கு நேர் எதிரான கருத்தாகும்.
இப்படி இருக்கையில் இந்த அமைப்பிலிருந்து ஈரான் தன்னை விடுவித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 13ம் தேதி இஸ்ரேல் விமானப்படை, ஈரானின் மூன்று அணுசக்தி மையங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியிருந்தது. அதை தொடர்ந்த 22ம் தேதி அமெரிக்கா நேரடியாக இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தது. இப்படி இருக்கையில்தான், IAEA மேற்பார்வையில் மிகப்பெரிய ஓட்டை விழுந்தருக்கிறது, இந்த தாக்குதலை IAEA தடுக்கவும், கண்டிக்கவும் தவறிவிட்டது என்று கூறி இந்த அமைப்பிலிருந்து ஈரான் வெளியே வந்திருக்கிறது.
ஈரானின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டு, நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் ஆதரவுடன் இந்த சட்டத்திருத்தம் உருவாக்கப்பட்டிருந்தது. இதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் கொடுத்தாலும், ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் இறுதி ஒப்புதல் தேவைப்படுகிறது. அதன் பின்னர்தான் இது சட்டமாக மாறும்.
இது சட்டமாக்கப்பட்டால், இனி ஈரான் தனது அணு சக்தியை எதற்கு பயன்படுத்துகிறது? அதன் நோக்கங்கள் என்ன என்பதை பற்றி IAEA ஆய்வு செய்ய முடியாது. இதற்கு முன்னர் கண்காணிப்புக்காக கேமராக்களையும், சென்சார்களையும் IAEA நிறுவியிருந்தது. இதனை ஈரான் இனி பராமரிக்காது. அதே நேரம் அமைதியான நோக்கங்களுக்கான தங்கள் அணுசக்தி திட்டம் வேகமாக முன்னேறும் என்றும் ஈரான் அரசு அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications