ஈரானுக்கு அடிமேல் அடி.. போருக்கு நடுவே திடீர் நிலநடுக்கம்.. பொதுமக்கள் கடும் அச்சம்
டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகின்றன. ஈரானின் பல்வேறு இடங்களில் இருநாடுகளும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் தற்போது திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடுத்து வருகிறது. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால் ஈரானில் போர் உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. ஈரானின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலநடுக்கம், ஈரானின் கெராஷ் பகுதியில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கடியில் 10 கிலோமீட்டருக்கு அடியில் பதிவாகி உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.3 என்று நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனை அமெரிக்காவின் புவியல் ஆய்வு மையம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதம் குறித்த உடனடி தகவல் கிடைக்கவில்லை. போருக்கு நடுவே ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஈரான் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
ஈரானில் நிலநடுக்கம் ஏற்படுவது ஒன்றும் புதிதல்ல. ஈரானில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஈரான் என்பது இயற்கையாகவே டெக்டோனிக் பகுதியில் அமைந்துள்ளது. டெக்டோனிக் தட்டுகள் என்பது பூமிக்கு கீழே பாறை மண்டலத்தின் மீது நகரும் பாறை துண்டுகளை குறிக்கும். இது அடிக்கடி நகருவதால் நிலநடுக்கங்கள், எரிமலை வெடிப்புகள் ஏற்படும். தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள கெராஷ் பகுதி ஈரானின் தெற்கு பகுதியில் தான் அமைந்துள்ளது.
மேலும் ஈரானை எடுத்து கொண்டால் இந்த கெரோஷ் பகுதி மிகவும் முக்கியமான இடமாகும். இந்த இடத்தை சுற்றி எரிசக்தி, கடற்கரை மற்றும் ராணுவ கட்டமைப்புகள் உள்ளன. குறிப்பாக கெரேஷ் பகுதயிில் இருந்து தென்கிக்கு பகுதியில் 150 முதல் 180 கிலோமீட்டர் தொலைவில் ஜஷின் யுரேனியம் சுரங்கம் (Gchine Uranium Mine) அமைந்துள்ளது. இந்த இடம் ஈரானின் உள்நாட்டு தேவைக்கான யுரேனியத்தை வழங்கி வருகிறது.
அதேபோல் இங்கிருந்து 250 -300 கிலோமீட்டர் தொலைவில் புஷர் அணுசக்தி நிலையம் அமைந்துள்ளது. பெர்ஷியன் வளைகுடா கடலையொட்டி இங்கிருந்து தான் மக்களுக்கு மின்சாரம் உற்பத்தி நடக்கிறது. ஈரானில் மின்சாரம் தயாரிப்புக்கு என்று செயல்பட்டு வரும் ஒரேயொரு அணுமின் நிலையம் இது மட்டும் தான்.
ஈரான் அணுஆயுதம் தயாரிக்க கூடாது. யுரேனியத்தை செறிவூட்டக்கூடாது என்று கூறி தான் அமெரிக்காவும், இஸ்ரேலும் தற்போது போரை தொடங்கி உள்ளன. அந்த வகையில் கெராஷ் பகுதியிலும் ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இப்படியான சூழலில் அங்கு இன்று திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது பொதுமக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.
-
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி!












Click it and Unblock the Notifications