இஸ்ரேலை விடுங்க.. கமேனி முதுகில் குத்தும் மருமகன்! ஈரானில் ஆட்சியை கவிழ்க்கணுமாம்! யார் இந்த மஹ்மூத்
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் ஈரானில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தனது மாமா அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும். இதற்கு எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரமாக நடந்து வருகிறது. நாளையுடன் இந்த மோதல் 2 வது வாரத்துக்கு என்ட்ரி கொடுக்கிறது. இது போராக மாறி உள்ளது. போர் தொடங்கிவிட்டது. இனி இஸ்ரேலை மன்னிக்கப்போவது இல்லை என்று கூறி ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறி உள்ளார்.

தற்போது இஸ்ரேல், ஈரான் மீதும், ஈரான், இஸ்ரேல் மீதும் ஏவுகணைகளை வீசி தாக்கி வருகிறது. இருநாடுகளின் ஏவுகணைகளும் மருத்துவமனை, குடியிருப்புகளை தாக்குகின்றன. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஈரானில் 650க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 1000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தற்போதைய மோதல் என்பது எளிதில் முடிவுக்கு வராது என்று வல்லுநர்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனென்றால் இஸ்ரேல் - ஈரான் சமாதானத்துக்கு தயாராக இல்லை. போதாத குறைக்கு அமெரிக்காவும் ஈரானை எதிர்த்து வருவதோடு, இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரானின் உச்ச பட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தற்போது பூமிக்கடியில் உள்ள பதுங்கு குழிக்குள் குடும்பத்துடன் பதுங்கி உள்ளார்.
இந்நிலையில் தான் அயதுல்லா அலி கமேனியின் ஆட்சிக்கு அவரது குடும்பத்திற்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரது சொந்த மருமகன் மஹ்மூத் மொரட்கானி தான் கமேனியின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று கூறி வருகிறார். இவர் யார் என்றால் அயதுல்லா அலி கமேனியின் சகோதரியின் மகன். இவர் கடந்த 1986ம் ஆண்டு ஈரானை விட்டு வெளியேறினார். தற்போது பிரான்ஸில் வசித்த வரும் நிலையில் அவர் கூறியுள்ளதாவது:
‛‛நான் எப்போதும் போரை ஆதரித்தது கிடையாது. ஆனாலும் ஈரானில் இப்போது நடக்கும் இஸ்லாமிய குடியரசு அரசை (அயதுல்லா அலி கமேனி) வீழ்த்துவதே அங்கு அமைதிக்கு வழிவகுக்கும். இந்த ஆட்சியை அகற்ற எது வேண்டுமானாலும் செய்யலாம். இஸ்ரேல் உடனான ராணுவ மோதல் வருத்தத்துக்குரியது. ஆனால் சீர்த்திருத்தம் செய்தல், நிலைமைக்கு ஏற்ப வளைந்து கொடுத்தல் உள்ளிட்டவற்றை விரும்பாத ஒரு அரசுக்கு இது தவிர்க்க முடியாததாக உள்ளது.
உண்மையில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஈரானின் நிலைமை இப்படியானதற்கு வருந்துகிறேன். அதேவேளையில் கமேனியை கொல்வதால் ஆட்சி உடனடியாக மறைந்துவிடுமா? என்றால் அது இன்னொரு கேள்வியாக தான் இருக்கிறது. எனக்கும், ஈரானில் உள்ளவர்களுக்கும் இடையேயான தொடர்புகள் மறைந்துவிட்டது. ஈரானில் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு உள்ளதால் நண்பர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஆனால் சமீபகாலமாக ஈரானில் நடக்கும் ஆட்சியின் பலவீனத்தை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆட்சி எவ்வளவு சீக்கிரம் முடிகிறதோ அவ்வளவுக்கு ஈரானுக்கு நல்லது. இந்த மோதல் ஈரானின் நடக்கும் ஆட்சியை வீழ்த்துவதுடன் முடிவுக்கு வர வேண்டும். இல்லையென்றால் அது பெரிய தோல்வியாக அமையும். ஏனென்றால் இந்த ஆட்சியாளர்கள் மீண்டும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இது மக்களை தான் பாதிக்கும்’’ என்றார்.
இந்த மஹ்மூத் மொரட்கானி தனது மாமா அயதுல்லா அலி கமேனியின் ஆட்சியை விமர்சிப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் பல முறை அவரது ஆட்சியை விமர்சனம் செய்துள்ளார். சர்வாதிகாரமாக ஆட்சி செய்வதாக பல முறை குற்றம்சாட்டி உள்ள நிலையில் தற்போது அவரது ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று பரபரப்பாக கூறியுள்ளார்.
-
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
ஹார்முஸ் நோக்கி வந்த ஈரானிய டிரோன்கள்...சுட்டு வீழ்த்திய அமெரிக்கா..மீண்டும் உச்சத்தில் டென்ஷன் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications