ஈரானை அடித்தால் இந்தியாவுக்கு வலிக்கும்..மிகப் பெரிய வாய்க்கா தகராறு! இது நடந்தால் மொத்தமும் போச்சு!
டெஹ்ரான்: இஸ்ரேல் - ஈரான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் உலக பொருளாதாரத்தையும், குறிப்பாக இந்தியாவின் எரிபொருள் சந்தையையும் பாதிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இந்த மோதலின் முக்கிய விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான கடல் வழித்தடமாக அறியப்படும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே உலகின் 20 முதல் 30 சதவிகிதம் வரை கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடைபெறுகிறது. இந்த வழித்தடம் சவுதி அரேபியா, இராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார் உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகளுக்கு முக்கியமான ஏற்றுமதி பாதையாக விளங்குகிறது.
தங்களுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் இந்த வழித்தடத்தை மூடிவிடுவோம் என்று ஈரான் நீண்ட காலமாக எச்சரித்து வந்துள்ளது. தற்போதைய மோதல் சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகினாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இந்த பாதையில் இடையூறு ஏற்பட்டாலே உலகளாவிய எண்ணெய் சந்தையில் உடனடி அதிர்வு ஏற்படும் என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஈரானுக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே பல ஆண்டுகளாக அரசியல் மற்றும் ராணுவ பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் ஆதரவு வழங்குவதாகக் கூறப்படும் ஆயுதக் குழுக்கள், குறிப்பாக லெபனான் பகுதியில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஏமன் பகுதியில் செயல்படும் ஹவுதி குழுக்கள் மற்றும் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் ஆகிய அமைப்புகள் மூலம் மோதல் நிலை தொடர்கிறது. இவ்வமைப்புகள் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் தாக்குதல்களும், அவற்றின் எதிர் நடவடிக்கைகளும் பிராந்திய பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தி வருகின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டங்களும் இந்த மோதலின் மைய காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஈரான் அணுசக்தியை அமைதியான பயன்பாடுகளுக்காக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கூறி வந்தாலும், செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு ஆயுதம் தயாரிக்க பயன்படலாம் என்ற அச்சத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும் வெளிப்படுத்தி வருகின்றன. இதனால் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முன்னேற்றம் எட்டப்படவில்லை.
இந்த சூழ்நிலையில், ஈரான் அணு ஆயுத திறனை கட்டுப்படுத்தும் நோக்கில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் பல நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. தெஹ்ரான் உள்ளிட்ட பல நகரங்களில் அணுசக்தி மற்றும் ராணுவ கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு நாடுகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதல் பிராந்திய அரசியல் மட்டுமல்லாமல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையும் பாதிக்கும் வகையில் மாறியுள்ளது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையின் 80 முதல் 90 சதவிகிதத்தை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. பெரும்பாலான இறக்குமதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், அந்த பாதையில் ஏற்படும் இடையூறு இந்திய பொருளாதாரத்துக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவின் இறக்குமதி செலவை அதிகரிக்கும். எண்ணெய் விலை பீப்பாய்க்கு ஒரு டாலர் உயர்ந்தால்கூட, இந்தியாவின் ஆண்டு இறக்குமதி செலவில் கணிசமான உயர்வு ஏற்படும் என்று கூறப்படுகிறது. இதன் விளைவாக, உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் உயர்வு ஏற்படும் அழுத்தம் உருவாகும். எரிபொருள் விலை உயர்வு பொதுமக்களின் தினசரி வாழ்க்கைச் செலவுகளையும் பாதிக்கும். போக்குவரத்து செலவுகள் உயர்வதன் மூலம் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், தொழில் மற்றும் உற்பத்தி துறைகளிலும் அழுத்தம் அதிகரிக்கலாம்.
-
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications