பதிலடியை தொடங்கிய ஈரான்.. அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல்! ஓமன் வளைகுடாவில் உச்சக்கட்ட பதற்றம்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரானிய சரக்குக் கப்பலான 'டூஸ்கா'-வை அமெரிக்க கடற்படை சிறைபிடித்ததற்குப் பதிலடியாக, ஓமன் கடலில் உள்ள அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இது ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

ஈரான்-அமெரிக்கா இடையே ஏப்.22 வரை தற்காலிக போர் நிறுத்தம் அமலில் இருக்கிறது. இந்த நேரத்தில், ஈரானின் சரக்கு கப்பல் மீது அமெரிக்கா நடத்தியிருந்த தாக்குதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

Iran

என்ன நடந்தது?

ஈரானின் 'டூஸ்கா' என்ற சரக்குக் கப்பல், ஓமன் வளைகுடாவில் அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறிச் செல்ல முயன்றது. அப்போது இந்த கப்பலின் என்ஜின் ரூம் மீது அமெரிக்க கப்பல் தாக்குதல் நடத்தியது. இதனால், கப்பலின் என்ஜின் தற்காலிகமாக செயலிழந்தது. இதனையடுத்து இந்த கப்பலை அமெரிக்கா சிறைபிடித்திருக்கிறது.

சீன தொடர்பு

சிறைபிடிக்கப்பட்ட 'டூஸ்கா' கப்பல், சீனாவிலிருந்து ஈரானின் பண்டார் அப்பாஸ் துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இதில் சீனத் தொடர்பு இருப்பதால், இந்த விவகாரம் இப்போது அமெரிக்கா - ஈரான் மோதலில் இருந்து மாறியுள்ளது.

ஈரானின் தாக்குதல்

மறுபுறம், ஈரான் அமெரிக்காவின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், ட்ரோன் மூலம் பதில் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல் படை மற்றும் ஹஸ்ரத் காதம் அல்-அன்பியா ராணுவ தளத்திலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இத்தகவலை ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

முழு போர்

நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவுடன் இரு நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்கா விரும்பிய நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என்று ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் புதன்கிழமை முதல் முழு அளவிலான போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வார்னிங் கொடுத்த ஈரான்

இந்த தாக்குதல் குறித்து எச்சரித்துள்ள ஈரான், எங்களுடைய எண்ணெய் ஏற்றுமதியைத் தடுத்துவிட்டு, மற்றவர்கள் மட்டும் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது. எண்ணெய் சந்தை அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இல்லையெனில் அனைவரும் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என வார்னிங் கொடுத்திருக்கிறது.

மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், வளைகுடா அரபு நாடுகளின் மின் நிலையங்கள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தகர்க்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+