டிரம்பை போட்டு பங்கம் செய்யும் ஈரான்.. தேர்தல் தோல்வியால் செம ஹேப்பி.. வெந்த புண்ணில் வேலை வீசுறாங்க
தெஹ்ரான்: அமெரிக்க இடைக்கால தேர்தலில் டொனால்டு டிரம்பின் குடியரசுக்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஈரான் போர் விவகாரம் டிரம்பின் இந்த சறுக்கலுக்கு காரணம் என்று கணிப்புகள் கூறும் நிலையில், டிரம்ப் தோல்வியால் மகிழ்ச்சி அடைந்துள்ள ஈரான், சமூக வலைத்தளங்களில் நையாண்டி செய்து வீடியோக்களை வெளியிட்டு வருகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்வி அடைந்து இருப்பதை பிற நாடுகளை விட ஈரான் அதிகம் கொண்டாடி வருகிறது. ஏன் அமெரிக்கர்களை விட அதிகம் கொண்டாடுவது ஈரான் தான் என சொல்லும் அளவிற்கு நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறது. ஈரான் தூதரகம், டிரம்பை கலாய்த்து ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளது.

கலாய்த்து போட்ட வீடியோ
இந்தியாவுக்கான ஈரான் தூதரகம் வெளியிட்டுள்ள ஏஐ வீடியோவில், "நான்கு நபர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் போன்ற் தோற்றத்துடன் உருவாக்கப்பட்ட ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று ஆபத்தான கழிவு பொருட்கள் என்று எழுதப்பட்ட வேஸ்ட் தொட்டிக்குள் வீசுகிறார்கள். இந்த வீடியோவுடன் அமெரிக்காவின் இடைக்கால தேர்தல் என்று பதிவிட்டு ஸ்மைலி எமோஜியையும் பதிவிட்டுள்ளது.
டிரம்ப் கட்சி தோல்வி அடைந்ததை கிண்டல் செய்து ஈரான் பதிவிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக கூறி அந்த நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தாக்குதல் நடத்தினர். 8 மாதங்களுக்கும் மேலாக அமெரிக்கா - ஈரான் போர் நீடித்து வருகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்த நாட்டின் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.
The U.S. midterm elections 😄 https://t.co/KDm874Cb1f
— Iran in India (@Iran_in_India) November 4, 2026
தேர்தலில் தோற்றாலும்..
இதனையடுத்து ஈரானும் கடுமையான பதிலடியை தொடங்கியது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால் சர்வதேச அளவில் எண்ணெய் போக்குவரத்து முடங்கியது. ஈரானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. அமெரிக்க இடைக்கால தேர்தலில் டிரம்ப் கட்சி தோல்விக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த போர் அமைந்துள்ள நிலையில், டிரம்பை ஈரான் கலாய்த்து தள்ளியுள்ளது.
அமெரிக்க இடைக்கால தேர்தலிலும் தோற்றாலும் ஈரான் மீதான நடவடிக்கையை நிறுத்தப்போவது இல்லை என்பதையே டிரம்ப் சூசகமாக குறிப்பிட்டுள்ளார். இதனால், தேர்தல் முடிவுகள் ஈரான் - அமெரிக்கா போரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றே கருதப்படுகிறது. இதற்கிடையே, டிரம்ப் கட்சி தோல்வி குறித்து ஈரான் பாதுகாப்பு தலைவர் மோஹ்சென் ரேசாய் கூறியதாவது:-
மொஜ்தபா கமேனி அறிக்கை
"போர்க்களத்திலும் ஹார்மூஸ் ஜலசந்தியிலும் முக்கியமான தோல்வியை ஈரான், டிரம்புக்க்கு வழங்கியது. வாஷிங்டன்னில் அரசியல் தோல்வியையும் கொடுத்துள்ளது . ஈரானிடம் யாரேனும் சண்டைக்கு வந்தால், போர்க்களத்தில் மட்டுமின்றி அவர்கள் சொந்த நாட்டிலும் அதற்கான விலையை கொடுப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு இடையே, ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலில் தோல்வி அடைந்தாலும் ஈரானுக்கு எதிரான போர் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கை மாறப்போவதுஇல்லை." என்று தெரிவித்துள்ளார்.




Click it and Unblock the Notifications
