கொழுந்தன்கள் வைத்த குறி.. 2 குழந்தைகளின் தாய்ன்னுகூட பார்க்கலயே.. 1.5 ஏக்கர் நிலத்தால் வந்த வினை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலங்கானாவில் 1.5 ஏக்கர் விவசாய நிலம் தொடர்பாக ஒரே குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 28 வயது பெண்ணைச் சுற்றி நடந்த இந்தச் சம்பவத்தின் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன..!!

தெலங்கானா மாநிலம் மகபூப்நகர் மாவட்டம் கொயில்கொண்டா மண்டலத்தில் உள்ள சிந்தால் தாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கே. சுனிதா (28). இவருக்கும் கே. பாலராம் என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 5 மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

Telangana father in law Brothers-in-Law

2 பெண் குழந்தைகள்

பாலராமுக்கு மனநலப் பிரச்சினை இருந்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலராமின் அண்ணன்களான மான்யா நாயக், பாண்டு நாயக் ஆகியோர் அவரை சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்..

இதனிடையே, பாலராமுக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் விவசாய நிலம் இருந்துள்ளது. கணவர் இல்லாத நிலையில், சுனிதா மற்றும் அவரது குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க கிராமப் பெரியவர்கள் முன்னிலையில் அந்த நிலத்தை சுனிதா பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

சுனிதாவை கொல்ல பிளான்

நிலம் சுனிதா பெயருக்கு மாற்றப்பட்டது, அவரது மாமனார் மாணிக்யா நாயக் மற்றும் கணவரின் அண்ணன்களுக்கு பிடிக்கவில்லை.. அதுமட்டுமல்ல, சுனிதா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், அவர் மறுமணம் செய்துகொண்டால் அந்த நிலம் புதிய கணவருக்கு சென்றுவிடும் என்றும் குடும்பத்தினர் சந்தேகப்பட்டுள்ளனர்.. இதனால் சுனிதா மீது அவர்கள் கடுமையான ஆத்திரத்திலும் இருந்துள்ளனர்.

சுனிதாவை கொன்றுவிட்டால், சொத்து பிரச்சனை தீர்ந்து விடும் என்றும் முடிவெடுத்துள்ளனர்.. இதற்காக சுனிதாவை கொலை செய்ய பல மாதங்களாகவே பிளான் போட்டு வந்திருக்கிறார்கள்.

தோட்டத்தில் சுனிதா

நிலம் தன்னுடைய பெயருக்கு மாறியதுமே, சுனிதா தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஆனால் சுனிதாவின் பெற்றோர், சிந்தல் தண்டாவிற்கு சென்று சொந்தமாக வீடு கட்டி அங்கேயே வாழும்படி சொன்னதால், அதன்படியே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது இரண்டு மகள்களுடன் சிந்தல் தண்டாவிற்கு வந்து சுனிதா வசிக்க ஆரம்பித்தார்.

2 நாட்களுக்கு முன்பு, சுனிதா தன்னுடைய தோட்டத்துக்கு வந்துள்ளார்.. அப்போது, அவரது மாமனார் மாணிக்யா நாயக், கொழுந்தன்கள் மான்யா நாயக், பாண்டு நாயக் மற்றும் பாண்டுவின் மனைவி பார்வதி ஆகியோர் சேர்ந்து சுனிதாவை தாக்கியிருக்கிறார்கள்.

கழுத்தை அறுத்து கொலை

அத்துடன் சுனிதாவின் கழுத்தில் துணியைக் கட்டி வீட்டுக்குள் இழுத்து சென்று, கத்தியால் அவரை கழுத்தை அறுத்து, தலையைத் துண்டித்தனர். இந்த சம்பவம் நடந்தபோது சுனிதாவின் கணவர் ஹைதராபாத்தில் இருந்தாராம். .

இதையடுத்து சுனிதாவின் அப்பா வால்யா நாயக் அளித்த புகாரின் அடிப்படையில், மாமனார், 2 கொழுந்தன்கள் மற்றும் ஒருவரின் மனைவி என 4 பேர் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+