தோற்றாலும் டிரம்ப் கையில் அஸ்திரம்.. வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? அதிபரால் என்ன செய்ய முடியும்?

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்கவில் நாடாளுமன்ற தேர்தலில் டிரம்ப் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டாலும், இது டிரம்புக்கு அதிகாரம் செலுத்துவதில் பெரிய அளவில் சிக்கலை ஏற்படுத்துவது இல்லை. ஏனென்றால் அமெரிக்காவில் அதிபர்களுக்கு சூப்பர் பவர் என்று சொல்லக்கூடிய வீட்டோ அதிகாரம் உள்ளது. வீட்டோ அதிகாரம் என்றால் என்ன? இதை வைத்து டிரம்ப்பால் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.

அமெரிக்காவில் இடைக்கால தேர்தல் என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தாலும் டிரம்ப்பிற்கு முக்கியமான அஸ்திரம் ஒன்று கையில் உள்ளது. அதுதான் வீட்டோ அதிகாரம். நாடாளுமன்றத்தில் தனது முடிவுகளுக்கு முட்டுக்கட்டை விழும் என்றாலும் தனது வீட்டோ அதிகாரம் மூலம் அதை முறியடிக்க டிரம்ப் ஆயத்தமாகி வருகிறார். வீட்டோ அதிகாரம் என்றால் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

Donald Trump veto power US election

டிரம்பின் முடிவே இறுதி?

அமெரிக்காவில் அதிபருக்குதான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். மக்களால் நேரடியாக அதிபர் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் எடுக்கும் முடிவுகளை கூட ரத்து செய்யும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சி வென்றுள்ள நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு டிரம்புக்கு முட்டுக்கட்டை போட ஜனநாயக கட்சி திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், வீட்டோ ஆயுதத்தை பயன்படுத்தி அதனை டிரம்பால் முறியடிக்க முடியும்.

தேர்தலில் பின்னடவை சந்தித்த உடனே இதனை சுட்டிக்காட்டும் விதமாக வீட்டோ என்ற வாசகம் அடங்கிய தொப்பி ஒன்றை டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். எதிர்க்கட்சிகளின் தவறான முடிவை தனது வீட்டோ அதிகாரம் மூலம் முறியடிப்பேன் என்பதையே டிரம்ப் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளதாக சர்வதேச நோக்கர்கள் கூறுகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் பல முக்கிய முடிவுகளில் டிரம்பின் முடிவே இறுதியானதாக இருக்கும்.

வீட்டோ அதிகாரம்

அதேநேரத்தில், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் வீட்டோ அதிகாரம் மூலம் அதிபர் பிறப்பிகும் உத்தரவுகளை ரத்து செய்யும் அதிகாரமும் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு உள்ளது. அரசியல் அமைப்பு சார்ந்த மசோதாக்களை ரத்து செய்ய அதிபருக்கு வீட்டோ அதிகாரம் இல்லை. இப்படி சில கட்டுப்பாடுகளும் வீட்டோ அதிகாரத்தில் உள்ளன.

அமெரிக்க அதிபரின் வீட்டோ அதிகாரம் என்பது அந்நாட்டு அரசியலமைப்பின் பிரிவு 1, உட்பிரிவு 7-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, அதனை நிராகரிக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. போர் தொடர்பான முடிவுகளில் அமெரிக்கா நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் முடிவுகளுக்கு எதிராகவும் டிரம்ப்பால் செயல்பட முடியும்.

பாக்கெட் வீட்டோ

ஒரு மசோதா வெள்ளை மாளிகைக்கு அனுப்பப்பட்டால் டிரம்பிடம் இரண்டு ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று மசோதாவுக்கு கையெழுத்திட்டு சட்டமாக்காலாம். அல்லது ஆட்சேபனைகள் இருந்தால் திருப்பி அனுப்பலாம். 10 நாட்களுக்குள் இந்த இரண்டில் ஒன்றை அதிபர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், தானாக அது சட்டமாகிவிடும்.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற வேண்டும். அதேவேளையில், 10 நாள் கால அவகாசத்திற்குள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்து, மசோதாவைத் திருப்பி அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டால், அந்த மசோதா சட்டமாகாது. இந்த நடைமுறை 'பாக்கெட் வீட்டோ' என்று அழைக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+