மண்ணுக்குள் புதையும் தெஹ்ரான்.. திடீரென தலைநகரை மாற்றும் ஈரான்.. புதிய தலைநகர் எது தெரியுமா?
தெஹ்ரான்: ஈரானின் தலைநகராக இத்தனை காலம் தெஹ்ரான் இருந்து வந்தது. இதற்கிடையே ஈரான் திடீரென தனது தலைநகரை மாற்ற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் வளைகுடா அருகே உள்ள கடலோர பகுதியில் ஈரான் தனது தலைநகரை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
எந்தவொரு நாட்டிற்கும் அதன் தலைநகர் தான் அடையாளம். இந்தியாவுக்கு டெல்லி, அமெரிக்காவுக்கு வாஷிங்டன், பிரிட்டன் லண்டன், ஜப்பானுக்கு டோக்கியோ. இதுபோல ஒரு நாட்டை சொன்னாலே நமக்கு அதன் தலைநகர் தான் நினைவுக்கு வரும்.

ஈரான் தலைநகர்
அரசியல் ரீதியாக மட்டுமின்றி, பொருளாதார ரீதியாகவும் தலைநகருக்கு முக்கிய பங்கு இருக்கும். அதேநேரம் இதுபோல பல்வேறு முக்கியத்துவங்கள் இருப்பதால் இதனால் பல சவால்களும் இருக்கும். அதை எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும். அதன்படியே ஈரானின் தலைநகராக இத்தனை காலம் தெஹ்ரான் இருந்து வந்தது. ஆனால், அங்குப் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதால் அது தனது தலைநகரை மொத்தமாக வேறு இடத்திற்கு மாற்றவுள்ளது.
இஸ்லாமிய புரட்சி
1979இல் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு தலைநகரை மாற்ற வேண்டும் என்ற பேச்சு ஈரானில் பல முறை எழுந்துள்ளது. இருப்பினும், அதற்கு மிகப் பெரியளவில் நிதி தேவை. மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதும் மிகப் பெரிய வேலை. இதனால் தலைநகரை மாற்றும் யோசனையை ஈரான் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தது. இந்தச் சூழலில் கடந்த ஜூலை மாதம் அதிபர் சீர்திருத்தவாத அதிபர் மசூத் பெசெஷ்கியன் தலைநகரை மாற்றும் ஐடியாவை மீண்டும் கையில் எடுத்தார்.
மண்ணுக்குள் புதையும் தெஹ்ரான்
தெஹ்ரானில் இப்போது போக்குவரத்து நெரிசல் உச்சத்தில் இருக்கிறது. மேலும், தண்ணீர் பற்றாக்குறை, உள்கட்டமைப்பு சிக்கல், தீவிர காற்று மாசுபாடு ஆகியவையும் இருக்கிறது. இவை அனைத்தையும் விட முக்கியமாக தெஹ்ரானின் நிலம் மெல்லச் சரிந்து வருகிறது. இயற்கையான நிகழ்வு மற்றும் மனிதர்களின் நடவடிக்கையால் அங்குள்ள நிலம் மெல்லப் புதைந்து வருகிறது. அது எப்போது வேண்டுமானாலும் மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. தலைநகரை மாற்றும் முடிவுக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.
குறிப்பாக மக்ரான் பகுதியில் ஒரு தலைநகரைத் தேர்வு செய்ய ஈரான் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மக்ரான் என்பது ஓமன் வளைகுடாவில் வளர்ச்சியடையாத கடலோரப் பகுதியாகும். இது ஈரானின் தெற்கு பகுதியில் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணம் மற்றும் ஹோர்மோஸ்கான் மாகாணத்திற்கு இடையில் உள்ளது. ஈரான் தனது தலைநகரை மாற்றும் முடிவை இறுதி செய்தால் இந்த பிராந்தியமே தலைநகராக வாய்ப்புகள் அதிகம்.
தெஹ்ரான் சிறப்புகள்
ஈரானில் பெரும்பாலான மக்கள் தலைநகரை மாற்றும் முடிவுக்கு ஆதரவே தெரிவிக்கிறார்கள். எதிர்காலத்தில் ஈரான் தலைநகராக எந்த நகரத்தைத் தேர்வு செய்தாலும் அது ஈரானின் வளமான கலாச்சாரத்தைப் பதிவு செய்வதாக இருக்க வேண்டும் என ஈரான் மக்கள் கூறுகிறார்கள். ஈரான் தலைநகரான தெஹ்ரானை 1786ஆம் ஆண்டில் ஆகா முகமது கான் கஜார் என்பவர் வடிவமைத்து இருந்தார்.
தெஹ்ரான் கடந்த இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேல் ஈரானின் அரசியல், நிர்வாக மற்றும் கலாச்சார தலைநகராக இருந்து வந்துள்ளது. தற்போது ஈரானின் அதிக மக்கள்தொகை உள்ள நகராக உள்ள தெஹ்ரானில் 1.8 கோடி பேர் வசிக்கிறார்கள். இது தவிர சுமார் 20 லட்சம் பேர் தினசரி தெஹ்ரானுக்கு வந்து செல்கிறார்கள்,
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
அமைதி ஒப்பந்தம் ரெடி.. டிரம்ப் கையெழுத்து போட்டால் ஈரான் போர் முடிவுக்கு வந்துடும்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications