இஸ்ரேல் மீதான தாக்குதல்.. திருவிழாபோல கொண்டாடும் ஈரான் மக்கள்

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்தியிருக்கும் தாக்குதலால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் நாட்டை இஸ்ரேல் கடுமையாக எச்சரித்துள்ளது. ஈரான் நாடு திருவிழா கோலம் பூண்டுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதல் இனிப்புகள் வழங்கி மக்கள் திருவிழா போல கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் சூழல் நிலவி வருகிறது. காஸா, லெபனானில் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஈரான் நாட்டின் ஆதரவு உள்ளது.

israel iran war iran israel

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர் மாயில் ஹனீயேவை ஈரான் நாட்டுக்கு சென்றிருந்தார். அவரை அங்கு வைத்து இஸ்ரேல் படை கொலை செய்யப்பட்டார். இதனால் ஈரான் கோபமடைந்து, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.

அதை இஸ்ரேல் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கடந்த வாரம் கொல்லப்பட்டார். மேலும், இஸ்ரேல் படை லெபனான் பகுதியில் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டனர். இது ஈரான் நாட்டை கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

israel iran war iran israel

ஈரான் நேற்று இரவு இஸ்ரேல் மீது சுமார் 180 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பு மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் கூறியது. இஸ்ரேலின் உளவுத்துறையான மொஸாட் அலுவலகம், விமானப்படை தளம் ஆகியவற்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் 10 மில்லியன் மக்கள் பாம் ஷெல்டர்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் இரண்டு நாட்டு எல்லையிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது எங்களின் வலிமையை காட்டுவதற்கான முன்னோட்டம் தான். எங்களுடன் மோதலில் ஏற்பட்டால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரித்தது. மறுபக்கம் இது இஸ்ரேல் அரசை கோபமடைய செய்துள்ளது. ஈரான் தவறு செய்துவிட்டது. இதற்கான விளைவுகளை அவர்கள் சந்திப்பார்கள் என இஸ்ரேல் கூறியிருந்தது.

israel iran war iran israel

இஸ்ரேலின் எச்சரிக்கையை ஈரான் பொருட்படுத்தவில்லை. மறுபக்கம் இஸ்ரேல் மீதான தாக்குதல் ஈரான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். தலைநகர் தெஹ்ரான், மாஷாத், அராக் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு சாலையிலும் மக்கள் ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்பு கொடிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இஸ்ரேல் நாட்டு கொடிக்கு நெருப்பு வைத்து எரிக்கவும் செய்தனர். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களும் இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாக்லெட், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடவுள் மகத்தானவர். அமெரிக்காவுக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது என்ற கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் பைக் மற்றும் கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது நஸ்ரல்லா மற்றும் மாயில் ஹனீயே புகைப்படங்களை கையில் ஏந்தியிருந்தனர். மக்கள் உற்சாகமாக பாட்டு பாடி, கோஷங்களை எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

"இது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு. எங்களின் மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதனால் தான் அனைவரும் ஒன்றாக இணைந்து கொண்டாடி வருகிறோம். எங்களாலும் திருப்பி அடிக்க முடியும் என்பதை காட்டவே இநத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு சம்பவத்துடன் நிற்க கூடாது. இஸ்ரேலின் ஆதிக்கம் முழுவதும் ஒடுக்கப்படும் வரை தாக்குதல் தொடர வேண்டும்." என கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+