ஹிஸ்புல்லாவுக்கு மரண அடி..நஸ்ரல்லாவை வீழ்த்திய இஸ்ரேல்! சண்டை செய்ய தயாராகும் ஈரான்.. மிரளும் மேற்கு
பெய்ரூட் : பாலஸ்தீனம் இஸ்ரேல் இடையேயான போர் லெபனான் - இஸ்ரேல் இடையேயான போராக மாறி உள்ளது. குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவரான ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்திருப்பது பதற்றத்தை மேற்குலகம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது மரணத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த பேஜர் தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில், 2500க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கி இருக்கிறது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று முன் தினம், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. நூற்றுக்கணக்கான குண்டுகள், ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவின் மகளும் கொல்லப்பட்டார். அதனை ஹிஸ்புல்லாவும் உறுதி செய்துள்ளது.
ஹசன் நஸ்ரலாவின் மரணம் மத்திய கிழக்கு பகுதியில் பதட்டமான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் தாக்குதலில் சிரியாவில் ஈரான் ராணுவ தளபதியான அப்பாஸ் உயிரிழந்த நிலையில் இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் ஈரான் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து ஈரானுக்கு எதிராக தக்க பாடம் கற்பிக்க ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது தொடர்பான இறுதி முடிவுரை எடுக்கப்படும் என ஈரான் எம்பி அகமது கூறியிருந்தார்.
இந்த நிலையில் சிரியாவில் ஷியா மற்றும் சன்னி பிரிவை சேர்ந்த இஸ்லாமிய கிளர்ச்சி குழுக்களுக்கு இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சில குழுக்களுக்கு அமெரிக்க ஆதரவு அளித்து வரும் நிலையில் அங்கு ராணுவ தளங்களையும் அமைத்துள்ளது. இந்த நிலையில் சிரியாவில் அமெரிக்க ராணுவ முகாம்களை குறி வைத்து ஈரானின் ஆதரவு பெற்ற சில கிளர்ச்சி குழுக்கள் தாக்குதல் நடத்தினர். ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்குப் பிறகு அந்த முகாம்கள் மீது நேற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், ஏமான் நாட்டை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் சீறிப் பாய்ந்த நிலையில், அவற்றை இடை மறித்து இஸ்ரேல் தாக்கி அழித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் பல ஆயுத குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கும் என கூறப்படுகிறது. பல நிலைகளில் இருந்து இஸ்ரேலுக்கு மிரட்டல்களும் தாக்குதல்களும் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications