ஈரான் தீவிரமடையும் போராட்டம்.. இணைய சேவை நிறுத்தம்.. எச்சரித்த டிரம்ப்
டெஹ்ரான்: ஈரான் நாட்டில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பொருளாதார சிக்கல் உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அங்கு கடந்த 12 நாட்களுக்கு மேலாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு முதல் அங்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பதற்றத்திற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுடன் கடந்த வருடம் ஏற்பட்ட போர் காரணமாக ஈரான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் கடந்த 3 வருடங்களில் இல்லாதளவுக்கு ஏராளமான பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. பணத்தின் மதிப்பு குறைந்து, பொருளாதார மந்த நிலை அதிகரித்தது. இதைக் கண்டித்து கடந்த 2025 டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஈரான் மக்கள் போராட்டத்தை தொடங்கினார்கள்.

ஈரான் மக்கள் போராட்டம்
டெஹ்ரானில் மக்கள் அலை அலையாக போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். வன்முறை வெடித்ததில் தற்போதுவரை சுமார் 45க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 2,260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசின் நிர்வாகமின்மை, தவறான கொள்கை முடிவுகள் ஆகியவற்றை கண்டித்தும், அரசியல் மற்றும் சமூக சுதந்திரத்தை வலியுறுத்தியும் நாடு முழுவதும் போராட்டம் வலுபெற்று வந்தது.
ஈரான் நாட்டு அதிபர் மசௌட் பெஸஷ்கியன், "மிகுந்த கட்டுப்பாட்டுடன் போராட்டத்தை கடைபிடிக்க வேண்டும். வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்று கூறியுள்ளார். இதனிடையே, "போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கொலை செய்தால் ஈரான் அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். "வாஷிங்டன்னில் இருந்து கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
டிரம்புக்கு பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி, "அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் போரில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் டெஹ்ரான் இல்லை. ஆனால் எங்களை குறிவைத்தால் பதிலடி கொடுப்போம்" என்று எச்சரித்துள்ளார். ஈரான் போராட்டத்தின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருப்பதாகவும் ஈரான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்! -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
ஹார்முஸில் இந்திய கப்பல்களுக்கு ஆபத்து? LPG பிரச்சனை தீராது போலயே! மிக முக்கிய தகவல் -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
“இந்தப் போரால் ஒரே ஒரு நல்லது நடக்கும்”.. ஈரான் - இஸ்ரேல் போர் பற்றி வைரமுத்து கவிதை! -
ரூபாய் மதிப்பு 100-ஐ தாண்டுமா? ஆர்பிஐ களத்தில் இறங்கியும் பலன் கிடைக்காத நிலை!












Click it and Unblock the Notifications