தவித்த தாலிபன்கள்... வைத்த கோரிக்கை.. கைகொடுக்க களம் இறங்கிய ஈரான்.. பறக்கும் எரிபொருள்கள்!
தெஹ்ரான் : ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை தொடங்குமாறு தாலிபன்கள் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீண்டும் தொடங்கியது. இதன் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு கிடைத்து வருகிறது.
Recommended Video
2001ல் ஆட்சியை பறிகொடுத்த தாலிபன்கள், 20 வருட யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றதால் ஆப்கானிஸ்தானில் கடந்த வாரம் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர்,
20 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான் ஆட்சியில் இருந்தபோது கடுமையான இஸ்லாமிய சட்டம் மற்றும் பழிவாங்கலுக்கு பயந்து பல ஆப்கானியர்கள் நாட்டை விட்டு தப்பித்தால் பொதும் என்று ஓடுகிறாரகள். குழப்பமான நிலை காரணமாக ஆப்கானிஸ்தானில் பெட்ரோலின் விலை டன்னுக்கு $ 900 ஐ எட்டி உள்ளது.

எரிபொருள் ஏற்றுமதி
இதனால் விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் பொருட்டு, தாலிபன்கள், ஈரானிடம் வர்த்தகர்களுக்கு எல்லைகளை திறந்து வைக்குமாறு வேண்டுகோள்வைத்தனர். தாலிபான் ஈரானுக்கு அனுப்பிய செய்தியில், நீங்கள் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியைத் உடனே தொடரலாம் என்று கூறியுள்ளதுடன், பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளனர். இந்த தகவலை தெஹ்ரானில் உள்ள ஈரானின் எண்ணெய், எரிவாயு மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்கள் ஏற்றுமதியாளர் சங்கத்தின் வாரிய உறுப்பினரனா ஹமீத் ஹொசைனி கூறினார்.

விலகல்
ஆகஸ்ட் 6 முதல் ஈரானின் வர்த்தகப் பாதுகாப்பு குறித்த கவலையின் காரணமாக பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய ஈரான் அரசு தடை விதித்து இருந்தது. ஆனால் தற்போது தலிபான்களின் அணுகுமுறையால் அந்த தடைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்று ஹமீத் ஹொசைனி கூறினார்.

குறைத்தது ஆப்கான்
ஈரான் மற்றும் பிற அண்டை நாடுகளின் எரிபொருள் இறக்குமதிக்கான கட்டணங்களை குறைப்பதற்கான தலிபான்களின் முடிவையும் அவர் மேற்கோள் காட்டினார், ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணத்தையும் ஊடகத்திடம் வெளியிட்டார். அண்டை நாடுகளில் இருந்து ஆப்கானிஸ்தானுக்கு பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி இறக்குமதிக்கான கட்டணங்களுக்கு 70 சதவீத தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கு அமெரிக்கா தடை
உலகின் நான்காவது பெரிய எண்ணெய் இருப்புக்களைக் கொண்டுள்ள நாடு ஈரான் ஆகும். ஆனால் 2018 இல் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த தடைகள் காரணமாக ஈரானிய எண்ணெய் ஏற்றுமதி கணிசமாகக் குறைத்து இருந்தது. ஆனாலும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு எரிபொருளை ஏற்றுமதி செய்வதை தொடர்கிறது.

20000 பீப்பாய்கள்
ஆப்கானிஸ்தானுக்கு ஈரான் பெட்ரோலை தான் அதிகம் ஏற்றுமதி செய்துள்ளது. மே 2020 முதல் மே 2021 வரை ஈரான் சுமார் 400,000 டன் எரிபொருளை தனது அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. ஒரு நாளைக்கு 20,000 பீப்பாய்களுக்கு மேல், ஈரானிய எரிபொருள் ஆப்கானிஸ்தானுக்கு செல்கிறது. அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கும் எரிபொருளை ஈரான் ஏற்றுமதி செய்து வருகிறது.
-
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்! -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல்












Click it and Unblock the Notifications