Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானை சுத்துப்போட்ட அமெரிக்கா.. குறுக்கே வந்த ரஷ்ய போர்க்கப்பல்.. நாளை முதல் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் செய்யாவிட்டால் ஈரான் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி வருகிறார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை குவித்துள்ளது. இந்த பதற்றத்துக்கு நடுவே தான் ரஷ்யா உள்ளே புகுந்துள்ளது. அதாவது ரஷ்யாவும், ஈரானும் நாளை ஓமன் கடற்பகுதியில் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த உள்ளது.

அமெரிக்காவும், ஈரானும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. அதேவேளையில் ஈரானும், ரஷ்யாவும் நல்ல நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் தான் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஈரானை மிரட்டும்போதெல்லாம் ரஷ்யா தலையிடு செய்து வருகிறது. மேலும் ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு ரஷ்யா உதவி வருகிறது.

iran-russia-to-conduct-joint-drills-in-the-sea-of-oman-amid-of-us-threat

அந்த வகையில் தான் ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு அமெரிக்காவும், இஸ்ரேலும், ஈரான் மீது குண்டுகளை வீசின. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் வகையில் யுரேனியத்தை செறிவூட்டியதாக கூறப்படும் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை

அதன்பிறகு தற்போது மீண்டும் இருநாடுகள் இடையே பதற்றம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். இதுதொடர்பாக இருநாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்று ஜெனீவாவில் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் அதிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் டிரம்ப் தொடர்ந்து ஈரானை மிரட்டி வருகிறார்.

போர்க்கப்பல் - போர் விமானம் குவிப்பு

ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பேரழிவை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி உள்ளார். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கில் ஈரானையொட்டி பகுதிகளில் அமெரிக்கா தனது படைபலத்தை பலப்படுத்தி உள்ளது. போர்க்கப்பல், போர் விமானங்களை குவித்துள்ளது. அமெரிக்கா படை வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இது ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றத்தை தணியவிடாமல் வைத்துள்ளது.

ரஷ்யா - ஈரான் கூட்டு பயிற்சி

மேலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் உரிய முறையில் ஈரானும் பதிலடி கொடுக்கும் என்று வார்னிங் செய்துள்ளது. இப்படியான சூழலில் தான் ஈரானும், ரஷ்யாவும் ஓமன் கடற்பகுதியில் நாளை முதல் கூட்டு கடற்படை பயிற்சிகளை மேற்கொள்ள உள்ளன. ஈரானை சுற்றி அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை நிலை நிறுத்தி உள்ள நிலையில் இந்த பயிற்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக ஈரானின் ரியர் அட்மிரல் ஹசன் மக்சூட்லூ கூறுகையில், ‛‛ஈரான் இஸ்லாமியக் குடியரசும், ரஷ்யாவும் ஒன்றிணைந்த கடற்படைப் பயிற்சியை ஓமன் கடல் மற்றும் வடக்கு இந்திய பெருங்கடலில் மேற்கொள்ள உள்ளது. இருநாடுகள் இடையேயான கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இது மேற்கொள்ளப்பட உள்ளது'' என்றார். இருப்பினும் பயிற்சி எத்தனை நாட்கள் நடக்கும்? என்பதை அவர் கூறவில்லை.

டிரம்புக்கு புதிய தலைவலி

மேலும் அமெரிக்காவின் போர்க்கப்பலுக்கு சவால் விடுக்கும் வகையில் ஈரான் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் ஹோர்முஸ் ஜலசந்தியில் பயிற்சியை மேற்கொண்டனர். அங்கு தான் அமெரிக்காவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அது பதற்றத்தை அதிகரித்தது. இப்போது ஈரான், ரஷ்யாவுடன் கைகோர்த்து பயிற்சியை தொடங்குவதால் அது டொனால்ட் டிரம்புக்கு பெரும் தலைவலியாக மாறி உள்ளதோடு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+