முன்னெப்போதும் இல்லாத அளவில் பதிலடி இருக்கும்.. டிரம்பை பகிரங்கமாக எச்சரித்த ஈரான்! வெடிக்கும் போர்
தெஹ்ரான்: அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஈரான் விரைவில் இறுதி செய்ய வேண்டும் என்று, டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதற்காக தனது கடற்படையை ஈரானுக்கு அருகில் நகர்த்தியுள்ளார். இப்படியிருக்கையில், எங்கள் மீது தாக்குதல் நடத்தினால்.. பதில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் மிகப்பெரிய கவலை ஈரானின் அணுசக்தி வளர்ச்சிதான். ஈரான் தனது அணுசக்தி மையங்களில் யுரேனியத்தை ஆயுதம் தயாரிக்கும் அளவிற்குச் செறிவூட்டி வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.

அமெரிக்கா கண்டனம்
இதற்கிடையில் ஈரானில் தற்போது உள்நாட்டு நிலவரமும் மோசமடைந்திருக்கிறது. கடந்த டிசம்பர் முதல் ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மிகப்பெரிய மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை ஈரான் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருவதாகவும், 5,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து வருகிறது.
போர்க்கப்பல்கள்
இந்நிலையில், நாங்கள் முன்மொழியும் அணுசக்தி ஒப்பந்ததில் கையெழுத்திட வேண்டும் என்று ஈரானை டிரம்ப் மிரட்டி வருகிறார். ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், முன்பு எப்போதும் இல்லாத வகையில் ஒரு தாக்குதலைச் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார். வெறும் எச்சரிக்கையோடு நிற்காமல், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற பிரம்மாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் தலைமையில், பல போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஈரான் கடல் பகுதியை நோக்கி அனுப்பி வைத்திருக்கிறார்.
டிரம்ப் வார்னிங்
இது 'வெனிசுலா' விவகாரத்தின் போது அனுப்பப்பட்ட படையை விட பெரியது என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது அணுசக்தி செறிவூட்டலை முழுமையாக நிறுத்த வேண்டும் மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய நிபந்தனை. பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், கடந்த ஆண்டு நடந்த ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் தாக்குதலை விட மிக மோசமான அழிவை ஈரான் சந்திக்கும் என்று ட்ரம்ப் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
பதிலடி கொடுப்போம்
இப்படி இருக்கையில், "ஈரான் மரியாதை மற்றும் நலன்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்குத் தயாராக உள்ளது. ஆனால் நாங்கள் வற்புறுத்தப்பட்டால் அல்லது தாக்கப்பட்டால், எங்களைத் தற்காத்துக் கொள்வோம். மட்டுமல்லாது முன்பு எப்போதும் இல்லாத வகையில் பதிலடி கொடுப்போம்" என ஈரான் கூறியிருக்கிறது. கடந்த காலங்களில் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா 7 ட்ரில்லியன் டாலர்களை வீணாக்கியதை ஈரான் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானின் மிரட்டல்
மட்டுமல்லாது கத்தார், துருக்கி, குவைத் மற்றும் பிற அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் அனைத்தும் ஈரானின் ஏவுகணை எல்லைக்குள் இருப்பதாக ஈரான் வரைபடத்துடன் எச்சரித்துள்ளது. ஒருவேளை போர் ஏற்பட்டால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என்றும் ஈரான் மிரட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இன்னும் சில மணி நேரத்தில் நல்ல செய்தி.. டெல்லியில் நின்றபடி அமெரிக்கா அதிரடி! கவனிக்கும் உலக நாடுகள் -
மீண்டும் வெடிக்கும் போர்..? ஈரானின் பதில் தாக்குதலில் ஷாக்கான அமெரிக்கா.. சிக்கிய F-35 பைட்டர் ஜெட்! -
மிகப்பெரிய டவிஸ்ட்.. யுரேனியத்தை கைவிடும் ஈரான்.. அமெரிக்காவிடம் தாராளமாக விட்டுக் கொடுக்க முடிவு -
பிடுங்கப்படும் அதிபரின் பவர்.. ஈரான் போரில் படுதோல்வி? 3 மாதங்களை கடந்தும் திணறும் டிரம்ப்! -
அடங்க மறுக்கும் ஈரான்.. 2.O தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா! டிரம்பின் திட்டம் இதுதான்! -
"திறக்கப்படும் ஹார்முஸ்.." முடிவுக்கு வரும் அமெரிக்கா ஈரான் போர்.. டிரம்ப் அதிரடி அறிவிப்பு! -
"நான் தான் இயேசுவின் அவதாரம்.." வெள்ளை மாளிகையில் துப்பாக்கி சூடு.. அடுத்த நொடி நடந்த பயங்கரம்! -
அவசரமாக வான் வழியை மூடிய ஈரான்! முடிவுக்கு வரும் போர் நிறுத்தம்.. தாக்குதல் திட்டமிடும் டிரம்ப்! -
அமெரிக்க போரில் மேஜர் திருப்பம்.. யுரேனியத்தை வழங்க ஈரான் ஒப்புதல்? பின்னணியில் நடப்பது என்ன? -
வெள்ளை மாளிகைக்கு வாங்க.. பிரதமர் மோடிக்கு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பு! உற்று நோக்கும் சீனா! -
நான் வந்துட்டேன்டா..மீண்டும் உச்சம் தொட போகும் தங்கம்! அந்த ஒரு வார்த்தைக்காக தான் உலகமே வெயிட்டிங்!












Click it and Unblock the Notifications