ஈரானில் ஆண்கள் வாலிபால் போட்டியை காண முயன்ற இளம்பெண்ணுக்கு 1 ஆண்டு சிறை
தெஹ்ரான்: ஈரானில் ஆண்கள் வாலிபால் போட்டியை காண முயன்ற இங்கிலாந்து-ஈரானிய பெண்ணுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் பெண்கள் வாலிபால் விளையாட கடந்த 2012ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பெண்கள் வாலிபால் விளையாடினால் அவர்களை அநாகரீகமாக நடந்து கொள்ளும் ஆண் பார்வையாளர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளது என்று ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஷெபர்ட்ஸ் புஷ் பகுதியைச் சேர்ந்தவர் இங்கிலாந்து-ஈரானிய ஆர்வலரான கோன்சே கவாமி(25). லண்டன் பல்கலைகழகத்தில் படித்த அவர் அடங்கிய பெண்கள் குழு கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி ஈரானில் அந்நாட்டு அணியுடன் இத்தாலி அணி மோதிய வாலிபால் போட்டியை காண சென்றது. இந்த குழுவினரை போலீசார் கைது செய்து, அடித்து அதன் பிறகு விடுவித்தனர்.
கவாமி மட்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்நிலையில் வாலிபால் போட்டியை காண முயன்றதற்காக கவாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவாமியை உடனே விடுதலை செய்யக் கோரி 7 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆன்லைன் கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications