ஈரான் ஈரக்குலையை நடுங்க வைக்கும் அறிவிப்பு.. டீல் பேசும் ட்ரம்ப்! நடு கடலில் தத்தளிக்கும் கப்பல்கள்!
டெஹ்ரான்: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் அங்கு மட்டுமல்லாது உலகின் பல முக்கிய நாடுகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடப் போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது. இதன் காரணமாக, ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரானுடன் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

உலகின் முக்கியமான கடல் வழிப்பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டாலோ அல்லது முற்றுகையிடப்பட்டாலோ, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என உலக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
அமெரிக்கா ஈரான் மோதல்
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகள் காரணமாக, இந்தியா நேரடியாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியிருந்தது. ஆனால் சமீபத்தில் மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட போர் சூழ்நிலை மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடி காரணமாக, ஏற்கனவே கப்பல்களில் ஏற்றப்பட்டிருந்த எண்ணெயை மட்டும் வாங்க இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதன் அடிப்படையில், இந்தியா மீண்டும் சில அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யத் திட்டமிட்டதாக கூறப்பட்டது.
இந்தியா
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடாக இருக்கும் இந்தியா, தனது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு நாடுகளுடன் தொடர்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் இந்திய கடற்கரைக்கு அருகே வந்து நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பெலிசிட்டி என்ற பெயருடைய கப்பல் ஆகும். இந்த கப்பல் சுமார் 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் குஜராத் மாநிலத்தில் உள்ள சிக்கா துறைமுகம் அருகே நங்கூரமிட்டுள்ளது.
கார்க் தீவு
இந்த கப்பல் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் ஈரானில் உள்ள கார்க் தீவு பகுதியில் இருந்து எண்ணெய் ஏற்றி பயணத்தை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதேபோல், இரண்டாவது கப்பலான ஜெயா ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கப்பல் பிப்ரவரி மாத இறுதியில் எண்ணெய் ஏற்றி பயணத்தைத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு கப்பல்களிலும் உள்ள எண்ணெயை எந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
எண்ணெய் கப்பல்
பொதுவாக பாரதீப் துறைமுகத்தை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பயன்படுத்தி வருகிறது. அதேபோல் சிக்கா துறைமுகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால், இந்தியாவிற்கு எண்ணெய் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
எரிபொருள் விலை உயர்வு
ஏற்கனவே உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த புதிய சிக்கல் இந்தியாவின் எரிபொருள் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது. மேலும், இந்திய துறைமுகங்களில் இந்த கப்பல்கள் நிறுத்தப்பட்டிருப்பது தற்காலிக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணை
அடுத்தடுத்த நாட்களில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் எதை நோக்கி நகர்கிறது என்பதைப் பொறுத்தே இந்த எண்ணெய் இறக்குமதி நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். ஹார்முஸ் நீரிணையைச் சுற்றியுள்ள பதற்றம் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தையே பாதிக்கும் அளவுக்கு மாறியுள்ள நிலையில், இந்தியாவும் இது தொடர்பான நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய எண்ணெய் வட்டாரங்கள் கூறுகின்றன.
-
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
39 முறை பொய் சொன்ன Trump.. முழுக்க முழுக்க மார்க்கெட் மேனிபுலேஷன்? ஈரான் கொடுத்த பதிலடி! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்! -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான்












Click it and Unblock the Notifications