குட்டி 'பென்டகன்' மீது அதிரடி தாக்குதல்.. தடுக்க முடியாமல் திணறிய இஸ்ரேல்! அப்போ 'அயன்டோம்' வேஸ்டா?
டெல் அவிவ்: குட்டி 'பென்டகன்' என அழைக்கப்படும் இஸ்ரேலின் ராணுவ தலைமையகத்தின் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளது. ராணுவ தலைமையகத்துக்கே இந்த நிலைமை எனில், சாதாரண மக்களின் நிலைமை என்ன? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது இஸ்ரேலின் 'அயன்டோம்' எனும் வான் பாதுகாப்பு அம்சம் என்ன ஆச்சு? என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அனுப்பிய ஏவுகணைகள் பல இடைமறிக்கப்பட்டாலும், சில ஏவுகணைகள் சரியான இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன.

பென்டகன் மீது தாக்குதல்
இப்படி தாக்குதலுக்கு உள்ளான பகுதியில் மிக முக்கியமானது இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் உள்ள ராணுவ தலைமையகம் ஆகும். இதை நோக்கி வரும் ஏவுகணைகளை தடுக்க, 'அயன்டோம்' எனும் வான் பாதுகாப்பு அம்சம் செயல்பட்டு வருகிறது. ஆனாலும் அதையும் மீறி தலைமையகத்தை ஈரான் ஏவுகணை தாக்கியுள்ளது. இது எப்படி சாத்தியம்? வெறும் 10 விநாடிகளில் 20 ஏவுகணைகளை இந்த அயன்டோம் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இருப்பினும் எப்படி தாக்குதல் சாத்தியமானது? பொதுவெளியில் தெரிந்தது இந்த ஒரே ஒரு வான் பாதுகாப்பு அம்சம்தான். இது தவிர,
டேவிட்ஸ் ஸ்லிங்
ஏரோ சிஸ்டம்
வான் பாதுகாப்பு அமைப்பின் சிறப்பம்சம்
என மேலும் இரண்டு வான் பாதுகாப்பு அம்சங்களை இஸ்ரேல் வைத்திருக்கிறது. இதில் 'ஏரோ சிஸ்டம்' எனும் அமைப்பு, கண்டம் விட்டு கண்டம் பாயும் திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை தாக்கி அழிக்க தனித்துவமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே நேரத்தில் 14 ஏவுகணைகளை இது தடுத்து அழிக்கும். வெறும் 30 வினாடிக்குள் 5க்கும் அதிகமான ஏவுகணைகளை, பூமியின் வளிமண்டலத்தில் வைத்தே அழிக்கும். இதை இஸ்ரேலுக்கு கொடுத்தது அமெரிக்காதான்.
இஸ்ரேலின் ஒப்புதல் வாக்குமூலம்
'டேவிட்ஸ் ஸ்லிங்' என்பது குறைந்த தூர ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும். குறிப்பாக ஹிஸ்புல்லா உள்ளிட்ட குழுவிடமிருந்து வரும் தாக்குதல்களை சாமாளிக்க நிலை நிறுத்தப்பட்டது. ஆனால், இவை மூன்றும் இருந்தும் டெல் அவிவ் மீது ஏவுகணைகள் விழுந்திருக்கின்றன. இதனை இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகளும் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
ஏவுகணைகளை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறியுள்ள அவர்கள், எத்தனை ஏவுகணைகள் வந்தன? அதில் எவ்வளவு தடுக்கப்பட்டது? எவ்வளவு உள்ளே விழுந்தது என்கிற விவரத்தை வெளியிட மறுத்துள்ளனர்.
அயன்டோம் மீது சந்தேகம்
இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தோல்வியடைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில், ஹிஸ்புல்லா அமைப்பு வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் சஃபேத், ஹைஃபா மற்றும் கர்மீல் போன்ற நகரங்கள் தாக்கப்பட்டன. இந்தத் தாக்குதலை தடுக்க 'அயன்டோம்' அமைப்பு தவறிவிட்டது. அப்போதே 'அயன்டோம்' குறித்த சந்தேகங்கள் எழுந்தன.
புகார்கள்
சந்தேகங்களுக்கு இஸ்ரேல் அரசு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்த நிலையில், அடுத்த மாதம், அதாவது 2024 அக்டோபரில் இஸ்ரேல் ராணுவ தளம் மீது எதிரிகள் ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் வரலாற்றிலேயே மிக மோசமான ட்ரோன் தாக்குதல் இதுதான். இதையும் 'அயன்டோம்' தடுக்க தவறிவிட்டது. டிரோன்கள், கப்பலிலிருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் ஒருங்கிணைந்த ராக்கெட் தாக்குதலுக்கு எதிராக 'அயன்டோம்' வேலை செய்யவில்லை என்று புகார் வலுவாக எழுந்தது.
இஸ்ரேலின் விளக்கம்
இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், "எந்த பாதுகாப்பு அமைப்பும் முழுமையானது அல்ல. மக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் முக்கியமான பகுதிகளை பாதுகாக்கவே இந்த வான் பாதுகாப்பு அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 'அயன்டோம்' அமைப்பு, மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழும் ஏவுகணைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்ற ஏவுகணைகள் மக்கள் வசிக்காத பகுதிகளில் விழுந்துவிடும். அதை இது இடைமறிக்காது" என்று கூறியுள்ளனர்.
ஆனால் ஒன்று மட்டும் நிஜம். என்னதான் நவீன தொழில்நுட்பங்கள் இருந்தாலும், அவை 24*7 என பாதுகாப்பு கொடுக்காது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications