உலகை அலறவிடும் இஸ்ரேல் "மொசாட்" உளவு ஆபீசில் பாய்ந்த ஏவுகணைகள்! ஈரான் பகீர் தாக்குதல்.. என்ன நடந்தது
தெஹ்ரான்: ஈராக் பகுதியில் அமைந்துள்ள இஸ்ரேல் உளவு அலுவலகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் பாதுகாப்புப் படை ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாதிகள் இருக்கும் பல்வேறு இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக் குர்திஸ்தானின் தலைநகரான அர்பிலில் அமைந்துள்ள உளவுத் துறை அலுவலகம் மீது தாக்குதல் நடந்துள்ளது.

ஈரானுக்கு எதிரான உளவுத் தகவல்களை சேகரிக்கும் பயங்கரவாதக் குழுக்களின் இருப்பிடங்களை அழித்ததாக ஈரான் தெரிவித்துள்ளது,
தாக்குதல்: இந்தத் தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். அந்நாட்டில் உள்ள பிரபல தொழிலதிபர் பெஷ்ரா டிசாயீ என்பவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். ஈராக் மட்டுமின்றி சிரியாவில் உள்ள இலக்குகளைக் குறிவைத்தும் ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உளவுத் தகவல்களைச் சேகரிக்கும் இடங்கள், பயங்கரவாதிகள் தொடர்புடைய இடங்களில் தாக்குதல் நடந்துள்ளன.
இதற்கு முன்பு ஈரான் மீது சிரியா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக சிரியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.. ஈரானின் இந்த தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, இந்த தாக்குதல்களைப் பொறுப்பற்றது என்று கூறியுள்ளது.
அமெரிக்கா: இது குறித்து அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று எர்பிலில் ஈரானின் தாக்குதல்களை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது.. கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறது. ஈராக்கை பாதிக்கும் வகையில் ஈரான் நடத்திய பொறுப்பற்ற ஏவுகணைத் தாக்குதல்களை நாங்கள் எதிர்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
அலெப்போ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன. மத்தியதரைக்கடல் திசையில் இருந்து வந்த 4 ஏவுகணைகள் இங்கே விழுந்தன, முன்னதாக கடந்த ஜனவரி 3ஆம் தேதி கெர்மானில் மறைந்த ஜெனரல் காசிம் சுலைமானியின் சமாதிக்கு அருகே நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் சுமார் 90 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பு ஏற்று இருந்தது.
அதேபோல ராஸ்கில் உள்ள போலீஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 11 ஈரான் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஈரானால் தடுப்புப்பட்டியலில் உள்ள ஜிகாதிஸ்ட் குழு ஜெய்ஷ் அல்-அட்ல் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்று இருந்தது.
மொசாட் உளவு அமைப்பு: ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பகுதியில் உள்ள இஸ்ரேல் உளவு தலைமையகத்தைத் தாக்கியது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் அலுவலகம் ஈராக்கில் அமைந்துள்ள நிலையில், அங்கே ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. உலகில் தலைசிறந்த உளவு அமைப்பான மொசாட் அமைப்பின் அலுவலகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications