கொரோனா வைரசால் குபீரென்று கிடைத்த வாழ்வு.. ரிலீசாகும் 54,000 சிறைக் கைதிகள்.. என்ன நடக்கும்?
தெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் அங்குள்ள சிறைக்கைதிகளுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. சுமார் 54 ஆயிரம் சிறைக்கைதிகளை அந்த நாட்டு அரசு தற்காலிகமாக விடுதலை செய்ய முன்வந்துள்ளது.
Recommended Video
ஈரானில் 2922 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 92 பேர் இந்த வைரசால் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அந்த நாட்டில் மருத்துவ அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரான் நாட்டில் உள்ள கோம் என்ற பகுதியில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளங்கள் நிறைய உள்ளன அரபு நாடுகளில் இருந்து இங்கு யாத்திரீகர்கள் அதிகம் வருகை தருவது வழக்கம் அந்த நகரத்தில் இருந்து வைரஸ் பாதிப்பு ஈராக் அரபு எமிரேட்ஸ் போன்ற நாடுகளுக்கும் பரவியுள்ளது.

உதவிகள்
உலக சுகாதார அமைப்பு ஈரானுக்கு ஒரு குழுவை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது. "தொழில்நுட்ப குழு உறுப்பினர்களுடன், விமானத்தில் 15,000 க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவ பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் அனுப்பப்படுவதோடு, கிட்டத்தட்ட 100,000 பேரை பரிசோதிக்கவும் கண்டறியவும் போதுமான ஆய்வக கருவிகளும் உள்ளன" என்று WHO ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

துபாய்
துபாயில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட் ராணுவ விமானம் மூலமாகவும், தொற்றுநோயியல் நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் ஆய்வக சோதனை நிபுணர்களின் ஆறு குழுக்கள் மூலமாகவும் உலக சுகாதார அமைப்பு 8 டன் மருந்துகள் மற்றும் சோதனை கருவிகளை வழங்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

என்ன நடக்கும்?
இந்த நிலையில்தான், 54,000 சிறைவாசிகளை விடுதலை செய்கிறது ஈரான். தற்காலிகமாக இவர்களை சிறையிலிருந்து வெளியே அனுப்புகிறது. சிறையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அது வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதை கருத்தில் கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதிகளை விடுதலை செய்த பிறகு, அதை சுகாதார அமைச்சகம் மேற்பார்வையிடும் என்று ஈரானின் நீதித்துறை செய்தித் தொடர்பாளர் கோலாம்ஹோசின் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். அவர்கள் எங்கு வைக்கப்படுவார்கள் அல்லது அதிகாரிகள் எவ்வாறு கண்காணிப்பார்கள் என்பதை அவர் விரிவாகக் கூறவில்லை. கண்காணிக்காவிட்டால் அவர்கள் தலைமறைவாகிவிடுவார்களே என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. தப்பித்தாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் போதும் என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டதையே இது காட்டுகிறது.

பெண் கைதி நிலை
"பாதுகாப்பு கைதிகள் அல்லது வழக்கமான கைதிகள் என்ற பாகுபாடுகளை பொருட்படுத்தாமல் கைதிகளின் ஆரோக்கியம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்று தெரிவித்துள்ளார் அவர். உளவு குற்றச்சாட்டில் ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ்-ஈரானிய பெண் நாசனின் ஜாகரி-ராட்க்ளிஃப் விடுவிக்கப்படுவாரா என்பது தெரிவிக்கப்படவில்லை. நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப் தனக்கு கொரோனா வைரஸ் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
வேலையை காட்டும் டிரம்ப்! ஈரான் உடனான டீலிங்கில்.. திடீர் ட்விஸ்ட்! சீரியஸாகும் பஞ்சாயத்து! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications