உச்ச கட்ட போர் பதற்றம்.. ஈரானில் இருந்து உடனே வெளியேறுங்க.. இந்தியர்களுக்கு பறந்த வார்னிங்
தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உதவி எண்களும் அறிவித்துள்ளது.
ஈரான்-அமெரிக்கா இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்கா தனது போர் விமானங்கள், போர்க்கப்பல்களை நகர்த்தியுள்ளது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில், ஈரானில் இருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் கூறியிருப்பதாவது ''ஈரானில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கருத்தில் கொண்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட தரப்பினர் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல வேண்டாம். ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகத்தை, +989128109115; +989128109109; +989128109102; +989932179359 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும் [email protected] என்ற இமெயில் வழியாக இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications