போரில் ஈரானை கைவிட்ட இந்தியா.. இஸ்ரேல் - அமெரிக்காவின் பக்கம் சாய்ந்த மோடி? இதை கவனிச்சீங்களா
டெல்லி: நம் நாட்டின் மீது நட்பு வைத்துள்ள நாடுகளி்ல் ஒன்றாக ஈரான் உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது போரை தொடங்கியதோடு, ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுள்ளதுது. இதுபற்றி நம் நாடு இன்னும் கண்டிக்கவில்லை. இதனால் போர் நடவடிக்கையின்போது நடுநிலையை வகித்து வரும் நம் நாடு இந்த முறை இஸ்ரேல், அமெரிக்க பக்கம் சாய்ந்ததா? ஈரானை கைவிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் போரை தொடங்கி உள்ளன. முதல் நாள் போரிலேயே ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். தலைநகர் டெஹ்ரானில் உள்ள அவரது மாளிகையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபோது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இதனால் கோபமான ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு துறையின் ராணுவ முகாம், விமானப்படை தளம், கடற்படை தளத்தை தாக்கி வருகிறது. கத்தார், சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்களை குறிவைத்து ஈரான் தாக்கி வருகிறது.
சார்பு நிலை குற்றச்சாட்டு
பொதுவாக இருநாடுகள் இடையேயான போர் என்றால் நம் நாடு எப்போதும் நடுநிலைமை தான் வகிக்கும். எந்த சார்பு நிலையையும் எடுக்காது. அனைத்து நாடுகளையும் அரவணைக்கும் வகையில் தான் நம் நாடு இந்த முடிவை காலம் காலமாக எடுத்து வருகிறது. ஆனால் தற்போது ஈரானுக்கும் - அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் நடக்கும் போரில் நம் நாடு சார்பு நிலை எடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக இஸ்ரேலும், ஈரானும் நம்முடைய நட்பு நாடுகள். டொனால்ட் டிரம்ப் அதிபரானது முதல் அமெரிக்கா நம்மை சீண்டி வருகிறது. இப்படியான சூழலில் ஈரானை கைவிட்டு இன்னொரு நட்பு நாடான இஸ்ரேலுடன் சேர்ந்து அமெரிக்கா தொடங்கிய போருக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கும் வகையில் செயல்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈரான் – இந்தியா உறவு
அதாவது ஈரானுக்கும், நமக்கும் நல்ல உறவு உள்ளது. அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் முன்பு ஈரானிடம் இருந்து தான் நாம் கச்சா எண்ணெய் வாங்கினோம். அமெரிக்காவின் பொருளாதார தடையால் இப்போது அதனை நாம் கைவிட்டு விட்டோம். அதேவேளையில் ஈரானுடன் நல்ல உறவு தொடர்கிறது.
ஈரானில் செயல்பட்டு வரும் சஹாபர் துறைமுகத்தின் 2 முனையங்களில் ஒன்றை நம் நாடு தான் கையாண்டு வருகிறது. பாகிஸ்தானை புறக்கணித்து மும்பையில் இருந்து ஈரான் வழியாக ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகளுக்கு வர்த்தகம் செய்ய இந்த சபாஹர் துறைமுகம் முக்கிய பங்காற்ற உள்ளது. இதனால் இந்த துறைமுகத்தை மேம்படுத்தும் பணியையும் நம் நாடு மேற்கொண்டது.
எதிர்ப்பு தெரிவிக்காத மோடி
இப்படி இந்தியாவுக்கு முன்னுரிமை வழங்கிய ஈரானை நம் நாடு கைவிட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகள் சேர்ந்து நடத்திய தாக்குதலையும், ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதற்கும் பிரதமர் மோடி இன்னும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அமெரிக்கா, இஸ்ரேலை கண்டிக்கவில்லை.
வெறுமனே பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும். சண்டையை நிறுத்த வேண்டும் என்று மட்டும் நம் நாடு கூறியுள்ளது. இதனால் காலம் காலமாக நட்புடன் இருந்த ஈரானை நம் நாடு கைவிட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யார் போருக்கு மாற்றாக
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது நம் நாடு நடுநிலைமை வகித்தது. ரஷ்யா நம்முடைய நெருங்கிய நட்பு நாடாக இருந்தாலும் போருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. ரஷ்யாவிடம் இருந்து நம் நாடு விலகியே இருந்தது.
இது போருக்கான காலம் இல்லை. பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியுறுத்தினார். மேலும் யாருக்கு ஆதரவு இல்லை. இந்தியா நடுநிலைமை வகிப்பதாக மத்திய அரசு வெளிப்படையாக அறிவித்தது. மேலும் நடுநிலைமை என்பது ்அமைதிக்கான பக்கம் என்றும் விளக்கியத.
இதில் முக்கிய விஷயம் என்றவென்றால் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உக்ரைன் பலமுறை பாகிஸ்தான் பக்கம் சாய்ந்தாலும் கூட நம் நாடு உக்ரைனையும் அரவணைத்தது. பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பலமுறை தெலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் உக்ரைனுக்கே நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தற்போது வரை ஈரான் தரப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை.
ஈரானை தவிர பிற நாடுகளுடன் பேச்சு
அதேவேளையில், ஈரான் மீதான போரில் நடுநிலைமை என்பதை இந்தியா வெளிப்படுத்தவில்லை. ஈரானிடம் இன்னும் பேசவில்லை. மாறாக ஈரானால் பதிலடி தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் தொலைபேசியில் பேசி அங்குள்ள நிலவரம் பற்றி கேட்டறிந்தார்.
மேலும் அந்த நாட்டின் மீதான ஈரானின் தாக்குதலை பிரதமர் மோடி கண்டிக்கவும் செய்தார். இருப்பினும் அதில் ஈரான் பெயரை குறிப்பிடாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு எடுக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்.
அதோடு ஈரான் போர் தொடங்கிய பிறகு பிரதமர் மோடி போரை தொடங்கிய இஸ்ரேல், ஈரானால் பதிலடி தாக்குதலுக்கு உள்ளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன், பஹ்ரைன், ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளுடன் பேசி உள்ளார். ஆனால் ஈரானுடன் பேசவில்லை.
அதுமட்டுமின்றி சமீபத்திய பட்ஜெட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொடுத்த அழுத்தத்தால் சபாஹர் துறைமுக பணிக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருந்தது . இதனால் தான் ஈரானை, இந்தியா கைவிட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இஸ்ரேலுடன் மோடி நெருக்கம்
அதேவேளையில் மத்திய அரசு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்ரேலுடன் நட்பு பாராட்டி வருகிறது. மேலும் சமீபகாலமாக இஸ்ரேலிடம் இருந்து ஆயுத ஏற்றுமதியை நாம் அதிகரித்துள்ளோம். இஸ்ரேலின் ஆயுத ஏற்றுமதியில் 38 சதவீதத்துக்கும் அதிகமானவை நம் நாட்டுக்கு தான் வருகிறது. இது இந்தியா - இஸ்ரேல் இடையேயான உறவை வெளிக்காட்டுகிறது.
அதுமட்டுமின்றி கடந்த மாதம் 28 ம் தேதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. ஆனால் அதற்கு 3 நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக இஸ்ரேல் சென்றார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இஸ்ரேலுடன் நிற்பதாக...
பிரதமர் மோடியை நல்ல நண்பர் என்று பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டிய நிலையில், இந்தியாவும், இந்திய மக்களும் இஸ்ரேல் உடன் நிற்பதாக கூறினார். மேலும் காசாவில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு நுழைந்து கடந்த 2023ம் ஆண்டில் நடத்திய தாக்குதலை சுட்டிக்காட்டி வருத்தம் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி ஈரான் மீதான போர் தொடங்கிய பிறகு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும் மோடி தொலைபேசியில் பேசினார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை நினைத்த அவர் தனது கவலையை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி விரைவில் போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
சோனியா காந்தி விமர்சனம்
இந்நிலையில் தான் ஈரான் விஷயத்தில் பிரதமர் மோடியின் மவுனம் என்பது போர் விவகாரத்தில் இந்தியாவின் நடுநிலை என்பதை மறந்து இஸ்ரேல் - அமெரிக்கா சார்பை எடுத்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் விமர்சனம் செய்துள்ளார்.
இதுபற்றி சோனியா காந்தி ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், ''ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை பிரமதர் மோடி கண்டிக்கவில்ல. அதேவேளையில் ஈரான் மேற்கொண்ட பதிலடி தாக்குதலை மட்டுமே கண்டித்துள்ளா். பேச்சுவார்த்தை, தூதரக ரீதியாக தீர்வு காண வேண்டும் என்று பொது கருத்துகளை மட்டுமே கூறியுள்ளார்.
சர்வதேச சட்டத்தை மீறி ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்ட விஷயத்தில் பிரதமர் மோடி தனது தெளிவான நிலைப்பாட்டை எடுத்து இருக்க வேண்டும். இது நம் வெளிநாட்டு கொள்கையின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இந்த விஷயத்தில் மவுனம் என்பது பொறுப்பை துறப்பதாகும்'' என சாடியுள்ளார்.
பாஜக மறுப்பு – விளக்கம்
இருப்பினும் இதனை மத்திய அரசின் ராஜதந்திரம் என்கிறது பாஜக. பாஜகவின் சமூக வலைதள பிரவின் பாஜக பொறுப்பு தலைவர் அமித் மாளவியா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அமித் மாளவியா, '' இது பொறுப்பான ராஜதந்திரம். ஈரான் விவகாரத்தில் இந்தியா மவுனமாக இருக்கவில்லை. நிதானத்தையும் இறையாண்மைக்கு மரியாதை கொடுத்து பதற்றத்தை தணிப்பதை இந்தியா வலியுறுத்தி வருகிறது. சோனியா காந்தியின் கருத்துகள் இந்தியர்களின் வாழ்வு குறித்த அக்கறையை விட வெளிநாட்டு கொள்கையை சமாதானப்படுத்தும் வகையில் உள்ளது'' என்றார்.
பின்னணி என்ன?
அதாவது மத்திய கிழக்கு நாடுகளான சவுதி, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பிற நாடுகளில் சுமார் 90 லட்சம் வரையிலான இந்தியர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு இந்தியவுக்கு உள்ளதால் நம் நாடு இப்படியான நடவடிக்கையை பின்பற்றுவதாகவும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
அதேவேளையில் நாம் ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை அமெரிக்கா, இஸ்ரேல் சேர்ந்து கொன்று இருந்தாலும் கூட அவரது மறைவுக்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் (OIC) உள்ள 57 உறுப்பு நாடுகளில் 10க்கும் குறைவான நாடுகள் மட்டுமே அனுதாபம் தெரிவித்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
-
சொந்த செலவில் சூனியம்.. 2022க்கு பிறகு அமெரிக்காவில் நடந்த அதிர்ச்சி! டிரம்புக்கு எதிராக மக்கள் -
ஒரு வழியாக டிரம்ப் எடுத்த முடிவு.. ஈரான் போரில் மாபெரும் ட்விஸ்ட்.. சஸ்பென்ஸ் வைக்கும் அமெரிக்கா! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
ஈரான் ஈரலை குறிவைக்கும் ட்ரம்ப்..கார்க்கை சுத்துப் போட்ட ‘இரும்பு அரக்கன்கள்’.. ரெடியான பாராசூட் படை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர்












Click it and Unblock the Notifications