ஈரான் போரால் பாகிஸ்தானுக்கு பேரிடி.. இப்படி நடக்கும்னு எதிர்பார்த்து இருக்கவே மாட்டாங்கே.. போச்சே
இஸ்லாமாபாத்: போரை நிறுத்தும் பேச்சுவார்த்தைக்கு ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மத்தியஸ்தம்செய்ய தயார் என பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில் தான் ஈரான் அடித்த அடியில் பாகிஸ்தான் கதிகலங்கி போய் உள்ளது. ஈரானில் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து உச்சம் தொட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் புரிந்து வருகிறது. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போர் 5வது வாரத்தை எட்டி உள்ளது. ஈரான் உடனடியாக பதிலடியை நிறுத்த வேண்டும்.

ஹார்முஸ் ஜலசந்தியை திறந்து சமாதானத்துக்கு வர வேண்டும். அமெரிக்கா சொல்வதை கேட்க வேண்டும் என்று அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார். ஆனால் ஈரான் அதிபர் டிரம்பின் பேச்சை கேட்பதாக இல்லை.
ஈரான் மீது வருங்காலத்தில் எந்தவொரு தாக்குதல்களையும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் நடத்த கூடாது என்ற உத்தரவாதத்தை டிரம்ப் தர வேண்டும். அதனை செய்தால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொள்வோம் என்று ஈரான் கறாராக கூறிவிட்டது. இதனால் ஈரான் - அமெரிக்கா போர் தொடர்ந்து வருகிறது.
கதிகலங்கிய பாகிஸ்தான்
இந்த போரால் அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் மட்டுமின்றி இன்னும் பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே தான் ஈரான் - அமெரிக்கா இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் தயார் என்று கூறி வருகிறது. இப்படியான சூழலில் தான் ஈரானின் செயலால் பாகிஸ்தான் கதிகலங்கி போயுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு
அதாவது ஈரான் போர் காரணமாக பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தான் மக்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாகிஸ்தான் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் கூறுகையில், ''ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை பாகிஸ்தான் கரன்சியில் 137.24 (இந்திய ரூபாயில் 45.6) வரை அதிகரிக்கப்படுகிறது. இதனால் இனி ஒரு லிட்டர் பெட்ரோல் பாகிஸ்தான் கரன்சியில் 458.4க்கு (இந்திய மதிப்பில் ரூபாய் .152.6) விற்பனை செய்யப்படும்.
டீசல் விலை உயர்வு
அதேபோல் டீசல் விலை லிட்டருக்கு 184.49 பாகிஸ்தான் ரூபாய் (இந்திய ரூபாயில் 61.42) வரை உயர்த்தப்பட்டு 520.35 பாகிஸ்தான் ரூபாய்க்கு (இந்திய ரூபாயில் 173.23)க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல் மண்ணெய் விலையும் லிட்டருக்கு 34 பாகிஸ்தான் ரூபாய் வரை உயர்த்தப்பட்டு 457.80 பாகிஸ்தான் ரூபாய்க்கு விற்கப்படுகிறது'' என்று அறிவித்தார்.
என்ன காரணம்?
பாகிஸ்தானை எடுத்து கொண்டால் அந்த நாட்டுக்கு தேவையான கச்சா எண்ணெய் ஐக்கிய அரபு அமீரகம், ஓமனில் இருந்து தான் அதிகளவில் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் பாகிஸ்தானுக்கு செல்லும். தற்போது ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது.
பாகிஸ்தானுக்கு கச்சா எண்ணெய் கப்பல்களை ஈரான் அனுமதித்து வந்தாலும் கூட போர் காரணமாக அந்த நாட்டில் தற்போது பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. இது பாகிஸ்தானுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
-
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. காலையிலேயே குலுங்கிய ஈரான்.. கியூபாவில் 150 ஆண்டுகளில் இல்லாத அதிர்வு -
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்புப் படை மோதல்.. 30 பேர் சுட்டுக்கொலை -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வன்முறை.. 30 பேர் பலியானது எப்படி? பிரச்சனை ஏன்? எளிய விளக்கம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
இஸ்ரேல் கப்பலை கண்டதும் சுட உத்தரவு.. பாப் அல்-மன்டெப் கண்ட்ரோலில் எடுக்கும் ஹவுதி!











Click it and Unblock the Notifications