Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரானை தாக்க சொன்னதே சவுதி தான்.. டிரம்புக்கு, பட்டத்து இளவரசர் கொடுத்த அழுத்தம் – ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து போரை தொடங்கி உள்ளனர். இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளின் முகாம்கள், இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியமே பற்றி எரிகிறது. இந்நிலையில் தான் ஈரான் மீது போரை தொடங்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு, சவுதி அரேபியா தான் காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளார். மேலும் தொடர்ந்து போர் தீவிரமாகி நடந்து வருகிறது.

iran saudi arabia donald trump us

ஈரானும் பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமானதளம் இருக்கும் நாடுகளை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

போர்க்களமான மத்திய கிழக்கு

அதன்படி சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், ஓமன் உள்பட பல நாடுகள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன்கள் மூலம் அட்டாக் நடத்தி வருகிறது. குறிப்பாக சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான அராம்கோ (Saudi Aramco) கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி உள்ளது.

அமெரிக்கர்களுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது முழுமையாக சவுதி அரசின் வசமாகி உள்ள. உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 10-ல் ஒரு பகுதியை அராம்கோ தான் பூர்த்தி செய்கிறது. சவுதி நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும்பகுதி இந்த ஒரு நிறுவனத்தைச் சார்ந்துதான் இருக்கிறது. இது சவுதி அரேபியாவுக்கு பெரிய ஷாக்கை கொடுத்துள்ளது. இதனால் சவுதி அரேபியா, ஈரானை கடுமையா கண்டித்துள்ளது.

சவுதி அரேபியா அழுத்தம்

இதனால் மத்திய கிழக்கு பிராந்தியமே போர்க்களமாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சவுதி அரேபியா கொடுத்த அழுத்தத்தால் தான் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதாக முக்கிய செய்தி வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈரான் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பெரிய அளவிலான ராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கொடுத்த அழுத்தமே முக்கிய காரணமாகும். சவுதி அரேபியா இந்த விஷயத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சவுதி இரட்டை நிலைப்பாடு

ஈரானை தாக்க தங்களின் வான்வெளி பரப்பை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி கொடுக்கமாட்டோம் என்று சவுதி அரேபியா கடந்த மாதமே அறிவித்து இருந்தது. இதன்மூலம் ஈரானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருப்பதாக சவுதி அரேபியா காட்டி கொண்டது. ஆனால் சவுதி அரேபியா இரட்டை வேடம் போட்டுள்ளது.

டிரம்புக்கு கொடுத்த அழுத்தம்

சவுதி அரேபியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் காலித் பின் சல்மான் கடந்த ஜனவரி மாதம் வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்தார். அப்போது ஈரான் மீது எந்த நடவடக்கையும் எடுக்காமல் இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் ஆபத்தான விளைவுகள் பற்றி எடுத்துரைத்து இருந்தார். அதன்பிறகு சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த ஒரு மாதமாக அதிபர் டிரம்பை பலமுறை ரகசியமாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

இஸ்ரேல் - சவுதியால்...

அப்போது ஈரான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்துள்ளார். மேலும் ஈரானால், சவுதி அரேபியாவுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அவர் எடுத்துரைத்துள்ளார். அதேபோல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், டொனால்ட் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்தார். ஈரான், சவுதி அரேபியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ளன.

இதில், சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகியவை அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகள். ஆனால் ஈரான் அப்படியில்லை. இந்நிலையில் தான் ஈரானால் தங்களின் நாடுகளுக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், உடனடியாக போரை தொடங்க வேண்டும் என்று சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகியவை டிரம்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.

போரை தொடங்கிய டிரம்ப்

இதனால் நட்பு நாடுகளுக்காக டொனால்ட் டிரம்ப் இந்த போரை தொடங்கி உள்ளார். ஈரான் மீது ராணுவ நடவடிக்கையை தொடங்குவதில் டிரம்ப் இறுதி முடிவு எடுக்காமல் இருந்தார். அமெரிக்க உளவுத்துறையின் படி அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஈரானால், அமெரிக்காவுக்கு எந்தவித நேரடி அச்சுறுத்தலும் இல்லை என கூறப்பட்டதால் டிரம்ப் போர் நடவடிக்கையை கிடப்பில் போட்டு இருந்தார். ஆனால் சவுதி அரேபியா, இஸ்ரேல் நாடுகள் கொடுத்த அழுத்தம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் Operation Epic Fury என்ற பெயரில் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது போர் தொடுத்ததுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

சவுதி - ஈரான் மோதல் ஏன்?

மேலும் ஈரான் மீது போர் தொடங்க சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அழுத்தம் கொடுத்ததன் பின்னணியில் இருநாடுகள் இடையே நிலவும் பிரச்சனைகள் தான் முக்கிய காரணமாகும். ஈரான் ஷியா இஸ்லாமியர்கள் நாடாகவும், சவுதி அரேபியா சன்னி இஸ்லாமிய நாடாகவும் உள்ளது. இதனால் இருநாடுகள் இடையே மதரீதியிலான பிளவு உள்ளது. அதேபோல் மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்தவும், அண்டை நாடுகளின் அரசியலில் செல்வாக்கு செலுத்தவும் இரு நாடுகளும் போட்டியிடுகின்றன.

அதேபோல் ப்ராக்ஸி போர்களில் இருநாடுகளும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. ஏமனில் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா உள்ள நிலையில் கிளர்ச்சியாளர்கள் ஹதிக்களுக்கு ஆதரவாக ஈரான் உள்ளது. அதேபோல் சிரியாவில் எதிரெதிர் துருவங்களாக இருநாடுகளும் உள்ளன. அதேபோல் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதை அமெரிக்கா, இஸ்ரேல் போல் சவுதி அரேபியாவும் எதிர்த்து வருகிறது. கச்சா எண்ணெய் விற்பனையில் இருநாடுகள் இடையே போட்டி நிலவுகிறது. இதனால் ஈரான் - சவுதி அரேபியா இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. இதனால் தான் ஈரான் மீது போர் தொடுக்க சவுதி அரேபியா, டொனால்ட் டிரம்புக்கு அழுத்தம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+