ஈரானிடம் அடிவாங்கும் அரபு நாடுகள்.. திருப்பி தாக்க சவுதி - அமீரகம் - கத்தார் தயங்குவது ஏன்? பின்னணி
டெஹ்ரான்: போரை தொடங்கி உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக இஸ்ரேல் மட்டுமின்றி மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ரஸ், கத்தார், பஹ்ரைன், ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளை ஈரான் தாக்கி வரும் நிலையில் அந்த நாடுகள் ஈரானை திருப்பி தாக்க தயங்கும் நிலையில் அதன் பின்னணியில் 'முஸ்லிம் உம்மா' எனும் முக்கிய அம்சம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரமாக போர் புரிந்து வருகின்றன. ஈரான் மீது தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்களை அனுப்பி இஸ்ரேலும், அமெரிக்காவும் 'அட்டாக்' செய்கின்றன.

இதில் போர் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரான் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட அமைச்சர், அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும் நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இன்று 4வது நாளாக போர் வீரியமாகி உள்ளது.
அரபு நாடுகள் மீது அட்டாக்
இதற்கு முக்கிய காரணம் ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கி இருப்பது தான். ஈரான் சார்பில் இஸ்ரேல் மட்டுமின்றி அரபு நாடுகள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் ராணுவதளம், கடற்படை தளம், விமானதளங்கள் இருக்கும் சவுதிஅரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சிரியா உள்பட பிற நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் 'அட்டாக்' செய்து வருகிறது.
வார்னிங் மட்டுமே
தொடக்கத்தில் அமெரிக்காவின் பாதுகாப்பு படைகளின் தளங்களை மட்டும் குறிவைத்த ஈரான் தற்போது சகட்டு மேனிக்கு தாக்குதல் நடத்தி வருகிறது. அரபு நாடுகளின் விமான நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள், எண்ணெய் கிடங்கு, ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றை குறிவைத்து அடிக்கிறது.
இருப்பினும் அரபு நாடுகள் ஈரானை திருப்பி தாக்கவில்லை. ஈரான் செயலை கண்டித்துள்ளதோடு, இனியும் பொறுத்து கொள்ள முடியாது. பொறுமைக்கும் எல்லை உண்டு என்று மட்டுமே வார்னிங் செய்துள்ளது.
சவுதி மட்டும் ஒருபடி மேலே போய் ஈரான் தொடர்ந்து தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும் தற்போது வரை சவுதி அரேபியாவும், ஈரானை தாக்கவில்லை. இப்படியான சூழலில் இன்று 4வது நாளாக அரபு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.
எழுந்த சந்தேகம்
இப்படியான சூழலில் தான் பலருக்கு ஒரு கேள்வி எழுந்துள்ளது. ஈரானை ஒப்பிடும்பாது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் நல்ல நிலையில் உள்ளன. இருப்பினும் ஈரானை ஏன் திரும்ப தாக்கவில்லை என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதன் பின்னணியில் சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதனை ஒவ்வொன்றாக இங்கு பார்ப்போம்.
முதல் காரணம்
பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்டவை அமைதியை விரும்பி வருகின்றன. யாருடனும் சண்டைக்கு போவது இல்லை. தான் உண்டு. தங்களின் வர்த்தகம் உண்டு என்று வாழ்ந்து வருகின்றன.
பொதுவாக அமைதியை விரும்புகின்றன. ஆனால் ஈரான் அப்படி கிடையாது. அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் மல்லுக்கட்டி வருகிறது. அதோடு பணம் கொட்டி கிடந்தாலும் ஈரானை போல் இந்த நாடுகளில் அதிநவீன ஏவுகணைகள், படை வீரர்கள் கிடையாது. இதனால் தயங்குகின்றன.
2வது காரணம்
ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்த பிறகு தான் அந்த நாடு அரபு நாடுகளை குறிவைத்து தாக்கிறது. இப்போது இந்த நாடுகள் ஈரானை தாக்கினால் அது 'முஸ்லிம் உம்மா'வை (Muslim Ummah) மீறுவதாகி விடும். 'முஸ்லிம் உம்மா' என்பது அல்லா வலியுறுத்தும் ஒற்றுமை, நபிகள் நாயகத்தின் போதனைகள் மீதான நம்பிக்கையால் ஒன்றுபட்ட இஸ்லாமியர்களாக இருப்பதாகும். ஒருவரியில் கூற வேண்டும் என்றால் இஸ்லாமியர்கள் நாடு, இனம், எல்லைகளை கடந்து ஒற்றுமையுடன் சகோதரத்துவத்தை பின்பற்ற வேண்டும் என்பது தான்.
வெளிசக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து இஸ்லாமியர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள ஒற்றுமையாக வாழ வேண்டும். தங்களுக்குள் பிரிவினை கூடாது என்பதை இது வலியுறுத்துகிறது. இதனால் தற்போது ஈரானை தாக்கினால் அது இஸ்லாமிய உம்மத்துக்கு எதிரானதாக விடும் என்று அரபு நாடுகள் பொறுமை காத்து வருகின்றன.
3வது காரணம்
ஈரான் ஒரு இஸ்லாமிய நாடு. ஷியா பிரிவை சேர்ந்த இஸ்லாமிய நாடாக அது உள்ளது. உலகளவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கையில் சன்னி பிரிவினர் தான் அதிகம். ஷியா பிரிவினர் குறைவாக தான் உள்ளனர். உலகளவில் 85 சதவீத இஸ்லாமியர்கள் சன்னி பிரிவினராகவும், 15 சதவீதம் பேர் ஷியா பிரிவாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஷியா மக்கள் அதிகமாக ஈரானில் தான் வசித்து வருகின்றனர். இதனால் தான் அது ஷியா இஸ்லாமிய நாடாக உள்ளது. மேலும் ஷியா மக்களின் உயர் தலைவராக பார்க்கப்பட்ட அயதுல்லா அலி கமேனி இஸ்ரேல், அமெரிக்காவால் கொல்லப்பட்டுள்ளார். இப்படியான சூழலில் ஈரானை தாக்குவது என்பது இஸ்ரேல், அமெரிக்காவுக்கு ஆதரவான நிலைப்பாடாக மாறிவிடும். அதோடு இஸ்லாமியர்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்தலாம்.
இதனால் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகள் ஈரானை தாக்காமல் பொறுமை காத்து வருகின்றன. இதனால் தான் சவுதி அரேபியாவின் அரசு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான அராம்கோவில் ஈரான் தாக்கினாலும் கூட அந்த நாடு அமைதி காத்து வருகிறது.
-
ட்ரம்ப் அகராதியில் இல்லாத அந்த வார்த்தை.. ஈரான் போரில் நடக்கும் செம ட்விஸ்ட்! உலக நாடுகள் வெயிட்டிங் -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
நாளைக்கு விடியும்போது இருக்கு கச்சேரி? பெரிதாக திட்டம் போடும் டிரம்ப்.. வெள்ளை மாளிகை மர்ம வீடியோ -
"டபுள்" கேம் ஆடி ஏமாற்றிய பாகிஸ்தான்.. உச்சக்கட்ட கோபத்தில் ஈரான்.. டிரம்ப் குஷியோ குஷி! -
ஈரான் தினமும் 1310 கோடி சம்பாதிக்கிறது.. ஹார்முஸ் ஜலசந்தியில் என்ன நடக்கிறது தெரியுமா? -
ஈரான் காட்டிய பச்சைக்கொடி.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த 2 எல்பிஜி கப்பல்கள்.. கெத்து காட்டும் இந்தியா! -
கொத்து கொத்தாக அமெரிக்க வீரர்கள் பலி? துபாய் உள்பட அரபு நாடுகளுக்கு ஈரான் கடும் வார்னிங் -
இந்தியாவில் இன்னும் 1 மாதத்திற்கான எல்பிஜிதான் இருக்கு.. அப்போ 1 மாசத்திற்கு பின்? என்ன நடக்கும்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications