ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஃபாலுஜா நகரை மீட்கிறது ஈராக்
பாக்தாத்: ஐ.எஸ். தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட ஃபாலுஜா நகரை 2 ஆண்டுகளுக்குப் பின்னர் ஈராக்கிய படைகள் மீட்கத் தொடங்கியுள்ன.
ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் ஈராக், சிரியா பகுதிகளைக் கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தைப் பிரகடனப்படுத்தி இருந்தன. அதன் தலைவராக அல் பக்தாதி அறிவிக்கப்பட்டார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ஈராக், சிரியாவில் போரில் குதித்தன. குர்திஸ்தான் படையினரும் துருக்கியும் அமெரிக்காவுக்கு ஆதரவாக நின்றன.

பறிகொடுக்கும் ஐ.எஸ்.
இதனால் கடந்த 2 ஆண்டுகாலமாக ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றிய நகரங்களில் பலவற்றை பறிகொடுத்துவிட்டது. சிரியாவும் ஈராக்கும் இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றன.

பாக்தாத் அருகே...
இந்த வரிசையில் 2014-ம் ஆண்டு ஐஎஸ் தீவிரவாதிகளிடம் பறிகொடுத்த ஃபாலுஜா நகரை தற்போது ஈராக் ராணுவம் கைப்பற்றி வருகிறது. இந்த நகரம் தலைநகர் பாக்தாத்துக்கு மிக அருகே உள்ளது.

சிக்கிய 50,000 பேர்
இருப்பினும் ஃபாலுஜாவில் எஞ்சியிருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இருதரப்புக்கும் இடையே சுமார் 50,000 பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.

இழப்பு தொடர் கதையாகிறது..
ஈராக்கில் ஐஎஸ் இயக்கம் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களில் இதுவரை 45% இழந்துள்ளது; சிரியாவில் 20% இடங்களை இழந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications