சதாம் உசேன் ஆட்சிக்கால உளவுப் பிரிவு அதிகாரிதான் ஐ.எஸ். இயக்கத்தின் "மூளை"யாம்!!
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: உலக நாடுகளை அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை உருவாக்கி அதன் மூளையாக செயல்பட்டது சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் ஈராக் உளவுத்துறை அதிகாரியாக பணியாற்றிய சமிர் அப்த் முகmமது அல் கலிஃபா தான் என அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெர்மன் நாட்டின் www.spiegel.de இணைய தளம் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் 31 பக்க ஆவணங்களை பெற்றுள்ளது. கையால் எழுதப்பட்டுள்ள அந்த ஆவணங்களில் ஐ.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என விவரிக்கப்பட்டுள்ளது.
www.spiegel.de இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
- ஈராக் அதிபராக சதாம் உசேன் இருந்த போது விமானப் படையின் உளவுப் பிரிவு அதிகாரியாக இருந்தவர் சமிர் அப்த் முகம்மது அல் கலிஃபாவி. இவர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் மூளையாக கருதப்படுகிறார். இவரைத்தான் ஹாஜி பக்கர் என ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அழைக்கிறது.
- சதாம் உசேன் ஆட்சிக் காலத்தில் எப்படியெல்லாம் அரசு இயந்திரம் இயங்கியதோ அதே பாணியில்தான் அதாவது கடத்தல், படுகொலை என்ற பாணியில் சிரியாவின் வடபகுதியை ஆக்கிரமித்துள்ளது ஐ.எஸ். இயக்கம்.
- தமது கைப்பட ஐ.எஸ். இயக்கம் எப்படி கட்டமைக்க வேண்டும்; யார் யாருக்கு என்ன என்ன பொறுப்புகள்; இயக்கத்துக்கான நிதியை எப்படி திரட்டுவது என்பதை எழுதியிருக்கிறார் ஹாஜி பக்கர்.
- 2006ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் தடுப்பு காவலில் இருந்தவர் ஹாஜி பக்கர்.
- 2010ஆம் ஆண்டு பக்கரும் ஈராக் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளும் அபு பக்கர் அல் பக்தாதியை இஸ்லாமிய தேசத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக உருவாக்கினார்கள்..
- 2012ஆம் ஆண்டு வடக்கு சிரியாவில் நகரங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஹாஜி பக்கர் சென்றார். அதன் பின்னர் செளதி அரேபியா, துனிசியா, செச்சேனியா, உஸ்பெஸ்கிஸ்தான் என வெளிநாடுகளில் இருந்து தீவிரவாதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தியவரும் ஹாஜி பக்கர்தான்.
- 2014ஆம் ஆண்டு சிரியாவில் நடைபெற்ற மோதலில் ஹாஜி பக்கர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
- ஹாஜி பக்கர் கொல்லப்பட்ட பின்னர் 2014ஆம் ஆண்டு அவர் வீட்டில் இருந்த ஆவணங்கள் துருக்கி கடத்தப்பட்டு அங்கிருந்து ஜெர்மனுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
- இவ்வாறு அந்த இணைய தள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications