பரம வைரி சவுதியுடனே நட்பானவர்! இஸ்ரேலை "தீர்க்க" சபதம் ஏற்றவர்! ஈரான் அதிபர் பலி.. கொலையா?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சமீபத்தில்தான் நேரில் சந்தித்து பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர். இரு தலைவர்களுக்கிடையிலான இந்த முதல் தொலைபேசி உரையாடல் உலக அளவில் கவனம் பெற்றது. சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை செய்தது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளை அதிர வைத்தது. ஏனென்றால் இரண்டு நாடுகளும் ஒரு காலத்தில் வைரிகள்.

Is Iranian President Ebrahim Raisi helicopter Crash death an assassination

பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக சமீபத்தில்தான் அறிவித்தது. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.

இரண்டு நாடுகளும் மோதல்: இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன. ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.

இரண்டு நாட்டு நட்பு: அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது. அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்தது. இரண்டு நாடுகளும் முதல்முறையாக மற்ற நாட்டில் தூதரகம் அமைக்க ஏற்றுக்கொண்டன. அதேபோல் தொலைபேசி உறவை மேற்கொள்ளவும் ஏற்றுக்கொண்டன. சீனாவின் சமாதான பேச்சே இதற்கு காரணம்.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன் இதற்காக பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர். இரு தலைவர்களுக்கிடையிலான இந்த முதல் தொலைபேசி உரையாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை செய்தது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளை அதிர வைத்தது.

இஸ்ரேல்: இப்படிப்பட்ட நிலையில் இஸ்ரேல் நாட்டை பழிவாங்குவேன். ஈரான் மீது இஸ்ரேல் கைவைக்க நினைத்த கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இஸ்ரேல் ஆட்சி மீதான தாக்குதலுக்கு திட்டமிட்டவர்களின் கைகளை முத்தமிடுகிறோம். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுடன் ஈரானையும் தொடர்புபடுத்துபவர்கள் தவறாக நினைக்கிறார்கள். நாங்கள் இதில் பங்கேற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை பாராட்டுகிறோம். இஸ்ரேல் மீது தாக்குதல் செய்தவர்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் செய்தது பெரிய சாதனை, என்று பாராட்டி இருந்தார் . இரண்டு நாட்டு மோதலுக்கு இடையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான சம்பவம் கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

போருக்கு இடையே மரணம்: இந்த போருக்கு இடையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியாகி உள்ளார். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டு உளவு அமைப்பான மொசாத் டிரெண்டாகி வருகிறது. இது இஸ்ரேல் வேலையாக இருக்குமோ என்ற விவாதம் எழுந்துள்ளது.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இஸ்ரேல் போருக்கு இடையே திடீரென ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்கு உள்ளானது. விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தது உறுதி ஆனது.

ஹெலிகாப்டரில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் எல்லோரையும் விபத்தில் பலியாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+