ஷாக்கடிக்கும் ஜப்பான்.. கடலில் கொத்து கொத்தாக கொட்டப்படும் அணு கழிவு நீர்.. பெரிய ஆபத்து.. பின்னணி
பெய்ஜிங்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கழிவு நீர் கடலில் வெளியிடப்பட உள்ளது.
2011ல் இங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டது. அங்கு சுனாமி காரணமாக ஏற்பட்ட அலை அணு உலை ரியாக்டர் 1-4 வரை சென்றது. இதனால் அணு உலைக்கு தண்ணீர் அனுப்பும் மோட்டார்கள் சேதம் அடைந்து செயல் இழந்தது. இதன் காரணமாக அணு உலை கூலண்ட் வேலை செய்யாமல் போய், அது அணு கசிவு ஏற்பட காரணமாக அமைந்தது. அந்த அணு உலை மீது அப்போது 14 மீட்டர் உயர சுனாமி அலை தாக்கியது குறிப்பிடத்தக்கது.

இதனால் அங்கு மூன்று ரியாக்டர்களில் மொத்தமாக கசிவு ஏற்பட்டது. அதோடு மூன்று ஹைட்ரஜன் வெடிப்புகளும் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 20 கிமீ சுற்றுவட்டாரத்தில் இருந்த 154,000 பேர் அவசரமாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. . ஜப்பானில் ஏற்பட்ட 2011 சுனாமி காரணமாக 19,747 பேர் பலி, 6,242 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அணு உலை கசிவால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 2,202 பேர் இங்கு பலியானது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தில் அணு பாதிப்பு ஏற்பட்டு நீர் மாசு ஏற்பட்டது. இதனால் பல லட்சம் லிட்டர் அணு ஆயுத கசிவு ஏற்பட்ட தண்ணீர் பசிபிக் கடலில் கலந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த அணு எரிபொருள் கலந்த நீர் கலப்பதன் மூலம் நிலத்தடி நீர் மேலும் மாசுபடுவதை தடுக்கும் முயற்சியில் அந்த அணு உலை உள்ளேயே பெரிய தடிப்பு அமைக்கப்பட்டது. தண்ணீர் வெளியேறுவதை தடுக்க உறைந்த மண் தடுப்பு கட்டப்பட்டது.
என்ன நடந்தது? : சுனாமி காரணமாக விபத்துக்கு உள்ளாகி செயல் இழந்த புகுஷிமா அணு உலையில் பல லட்சம் லிட்டர் கழிவு நீர் உள்ளது. அங்கே உள்ளே அணு ரியாக்டர் கோரை குளுமைப்படுத்த இப்போதும் நீர் பயன்படுத்தப்படுகிறது . இந்த நீர் அங்கே உள்ள சேமிப்பு டேங்குகளில் சேமிக்கப்பட்டு வருகிறது. அக்டோபர் 2019 நிலவரப்படி, இந்த அணு ஆலை பகுதியில் 1.17 மில்லியன் கன மீட்டர் அளவிலான அணு மாசு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் காலம் முழுக்க இப்படி சேமிக்க முடியாது.
இதனால் இதை சுத்தம் செய்து கடலில் வெளியிட ஜப்பான் அரசு செய்துள்ளது. முடிவு ஜப்பானிய விதிமுறைகள்படி இந்த நீரை கடலுக்கு வெளியேற்ற அனுமதிக்கும் அளவிற்கு இதை சுத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி ரேடியன்யூக்லைடுகளை அகற்றக்கூடிய ஒரு சுத்திகரிப்பு அமைப்பு மூலம் இந்த அணு மாசு தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இந்த நீரில் இருக்கும் டிரிடியம் தவிர மற்ற அணு ஆயுத மாசுக்கள் சுத்திகரிக்கப்பட்டது. தற்போது நிலவரப்படி அங்கே இருக்கும் 80 சதவிகித நீர் சுத்திகரிக்கப்பட்டு உள்ளது.
அங்கே 1000க்கும் அதிகமான பெரிய டேங்குகளில் நீர் நிரப்பப்பட்டு உள்ளது. இதைத்தான் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்துவிட ஜப்பான் முடிவு செய்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் இந்த தண்ணீரை படிப்படியாக பசிபிக் பெருங்கடலில் விடுவிக்க விரும்புகிறது. இப்படி வெளியேற்றப்படுவதுதான் பாதுகாப்பானது என்று வலியுறுத்துகிறது.
அணு கழிவு நீரை சுத்திகரித்து கடலில் விடுவது அணுமின் நிலையங்களின் வழக்கமான நடைமுறையாகும். ஆனால் இது விபத்தின் காரணமாக வெளியேற்றப்படும் நீர் என்பதால் கொஞ்சம் சிக்கலானது. இதையடுத்து புகுஷிமா அணுஉலை கழிவுகள் இந்த மாதத்தில் இருந்து பசிபிக் கடலில் திறந்து விடப்பட வாய்ப்பு உள்ளதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனா ஷாக்: புகுஷிமா அணு மின் நிலைய நீரை ஜப்பான் கடலில் வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்த மாத இறுதியில் இந்த கழிவு நீர் கடலில் வெளியிடப்பட உள்ளது. இந்த விவகாரம் சீனாவை மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஜப்பான் இந்த நீரை வெளியேற்ற கூடாது என்பதில் சீனா தீர்க்கமாக இருக்கிறது. ஏனென்றால் அந்த கடல் பகுதியை சீனாவும் பகிர்ந்து கொள்கிறது. சீனாவின் கடல் வளம், மீன்பிடிப்பு, சுற்றுலா, இயற்கை வளம் என்று பல விஷயங்கள் இதனால் பாதிக்கப்படும்.
அதனால் ஜப்பான் இந்த நீரை வெளியேற்றுவதை உடனே நிறுத்த வேண்டும் என்று சீனா கதறிக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் ஆசியாவில் இருக்கும் பல்வேறு நாடுகளின் உதவியை சீனா கேட்க தொடங்கி உள்ளது. பொதுவாக ஆசிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் சீனா இந்த முறை ஆசிய நாடுகளின் உதவியை மன்றாடி கேட்க தொடங்கி உள்ளது.
அதன்படி ஏசியன் கூட்டமைப்பில் இருக்கும் 27 ஆசிய நாடுகளின் உதவியை சீனா கேட்டுள்ளது. இந்த 27 நாடுகளும் இணைந்து ஜப்பானுக்கு பிரஷர் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. முன்பெல்லாம் இந்த 27 நாடுகளை சீனா துச்சமென மதிக்கும். ஆனால் இப்போதே அதே நாடுகளிடம் சீனா உதவி கேட்டு செல்லும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது.
தென் கொரியா இந்த விவகாரத்தில் ஜப்பான் பக்கம் நிற்கும் நிலையில் தனது வைரி தென்கொரியாவிடம் கூட உதவி கேட்க சீனா முடிவு செய்துள்ளதாம், அதேபோல் ஐநாவின் கதவை தட்டி ஐநாவிற்கான அணு சக்தி வாட்ச் டாக்கை கேள்வி கேட்கவும் சீனா முடிவு செய்துள்ளதாம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications