அடுத்த வாரம் ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய்ய விண்கல் நம்மை அழிக்கப் போகுதாம்.. நல்லா விட்ராங்கய்யா உடான்ஸு!
பூமியை அடுத்த வாரம் கடக்கவுள்ள ராட்சத விண்கல் பூமி மீது மோதும் என்று சில விஞ்ஞானிகள் கிலி ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் நாசா இதை மறுத்துள்ளது.
நாசா: 2016WF9 என்ற பெயர் கொண்ட பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமி மீது மோதி பூமியை அழிக்கப் போவதாக ஒரு பெரிய்ய வதந்தி கிளம்பி பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என்று நாசா விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர்.
இந்த விண்கல்லானது நமது வளிமண்டலத்தை ஊடுறுவி உள்ளே வந்து பூமியை மிகப் பெரிய அளவில் தாக்கி பூமியை சுத்தமாக அழித்து விடும் என்பதுதான் பரவி வரும் செய்தியாகும். ராட்சத அணு குண்டுக்குச் சமமானதாம் இந்த விண்கல்.

ஆனால் நாசா என்ன சொல்கிறது என்றால் இந்த விண்கல் அடுத்த வாரம் நமது சுற்றுப் பாதையை கடந்து செல்லவுள்ளது என்று மட்டுமே கூறியுள்ளது. அதேசமயம், இந்த விண்கல்லால் நமக்கு எந்த சேதமும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், பூமியிலிருந்து 32 மில்லியன் மைல் தொலைவில்தான் இது கடந்து செல்லவுள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
இந்த விண்கல்லை வைத்து ஏகப்பட்ட கட்டுக்கதைகளை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டனர். நாசா உண்மையை மறைத்துப் பேசுவதாக சிலர் கிளப்பி விட்டு வருகின்றனர். உண்மையில் இந்த விண்கல்லானது பூமி மீது மோதி அழிக்கப் போவதாக அவர்கள் கூறுகின்றனர். 2.2 கிலோமீட்டர் அகலம் கொண்டதாக இந்த விண்கல் உள்ளதாகவும் இந்த விண்கல்லால் பூமிக்கு ஆபத்து என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
இதுகுறித்து டாக்டர் டியோமின் டமிர் ஜகரோவிச் என்பவர் கூறுகையில், நாசா வாய் கூசாமல் பொய் சொல்கிறது. இந்த விண்கல் நமது பூமியை அழித்து விடும். ராட்சத அணு ஆயுதத்திற்கு இது சமம். மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். கடல்கள் கொதித்துக் கொந்தளித்து விடும். சுனாமிகள் உலகை சூறையாடும்.
உண்மையில் நிபுரு என்ற ஒரு கிரகத்திலிருந்துதான் இந்த விண்கல் வந்து கொண்டுள்ளது. இந்த கிரகமானது நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே நம்மை ஒட்டியுள்ளதாகும்.
இந்த கிரகம் மிகப் பெரிய அபாயகரமானதாகும். இதற்கு X கிரகம் என்றும் பெயர் உள்ளது. இதுதான் பல இயற்கை சீற்றங்கள் பூமியில் ஏற்பட காரணமாகும். இதை நாசா வெளியில் சொல்வதே இல்லை.
நிக்கல் தாதுவுடன் கூடிய டைட்டானியம்தான் இந்த விண்கல்லில் உள்ளது. எனவே இது வளி மண்டலத்திற்குள் நுழைந்தாலும் கூட எரிந்து சாம்பலாகாது. அப்படியே உள்ளே வந்து விடும். நிபிரு கிரகத்தால் நமது பூமிக்கு ஒரு நாள் பேராபத்து உண்டு. அதற்கு டீசர் போல இந்த விண்கல்லின் வருகையை நாம் எடுத்துக் கொள்ளலாம். இந்த விண்கல்லால் எந்த இடத்திற்கு ஆபத்து வரும் என்பது நாசாவுக்குத் தெரியும். ஆனால் அது தெரிவிக்காமல் கமுக்கமாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார் டியோமின்.
ஆனால் நாசா விடுத்துள்ள அறிக்கையில், 2016WF9 விண்கல்லின் பாதை சரியாக கணிக்கப்பட்டுள்ளது. அது எந்தப் பாதையில் வந்து கொண்டுள்ளதோ, அதில் மாற்றம் இல்லை. மேலும் விண்கல்லால் பூமிக்கும் எந்த ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறியுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications