Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவுடன் மீண்டும் போர்.. ஆப்கனையும் விடமாட்டாங்களாம்! கொக்கரித்த பாக்., ராணுவ அமைச்சர்! பின்னணி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு பாகிஸ்தானை ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் துல்லியமாக தாக்குதல் நடத்தி பந்தாடியது. ஆனாலும் கூட இன்னும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்து நம்மை சீண்டி வருகிறது. இந்நிலையில் தான் இந்தியாவுடன் மீண்டும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக பகீர் கிளப்பி உள்ளார் பாகிஸ்தானின் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதியில் பஹல்காமில் நுழைந்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவராதிகள் 26 அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இதற்கு நம் நாடு கடந்த ஆண்டு மே 7 ம் தேதி பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நம் நாடு, பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

is-pakistan-planning-war-with-india-defence-minister-khawaja-asif-warns-afghanistan-and-modi-govern

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள், ராணுவ தளம், விமானப்படை தளங்களை துல்லியமாக தாக்கி அழித்தது. அடித்த அடியில் அலறிய பாகிஸ்தான் நம் நாட்டிடம் மண்டியிட்டது. தாக்குதலை நிறுத்தும்படி கெஞ்சியது. இதையடுத்து தாக்குதலை நம் நாடு நிறுத்தியது.

மிரட்டிய ராணுவ அமைச்சர்

இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் சீண்டினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று நம் நாடு எச்சரித்துள்ளது. ஆனாலும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. தொடர்ந்து நம் நாட்டை சீண்டி வருகிறது.

அந்த வகையில் தான் தற்போது பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளதோடு, நம் நாட்டுடன் மீண்டும் போர் வரலாம் என்று மிரட்டி உள்ளார்.

இந்தியா மீது குற்றச்சாட்டு

இதுதொடர்பாக கவாஜா ஆசிஃப், ‛‛ஆப்கானிஸ்தான் எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்கானிஸ்தான் மீது வான்வெழி தாக்குதல்களை நடத்த பாகிஸ்தான் தயங்காது. இதனால் ஆப்கானிஸ்தான் கவனமாக இருக்க வேண்டும்.

அதோடு ஆப்கானிஸ்தான் வழியாக இந்தியா பயங்கரவாதத்தை மறைமுகமாக ஆதரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமைப்புகளை பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பயன்படுத்தி வருகிறது.

இந்தியாவுடன் போர்

பாகிஸ்தானை குறிவைப்பதில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமைப்புகள் ஒரே நேர்க்கோட்டில் உள்ளன. ஆப்கானிஸ்தான் அதிகாரிகளுடன் நெருங்கிய உறவுகள் இருந்தபோதும் இந்தியா இதைத் தொடர்ந்து மறுக்கும். இதனால் தற்போதைய சூழலில் இந்தியாவுடன் போர் ஏற்படவும் வாய்ப்புள்ளது'' என்று கூறியுள்ளார்.

‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் அமைப்புகள் பாகிஸ்தானை டார்க்கெட் செய்து நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் இந்தியா தான் காரணம் என்று பாகிஸ்தான் புலம்பி வருகிறது. தற்போது அதனையே பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் செய்துள்ளார்.

பின்னணி என்ன?

இதற்கு பின்னணியிலும் முக்கிய காரணம் உள்ளது. அதாவது பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகள். இருநாடுகள் இடையே கடந்த ஓராண்டுக்கு மேலாக மோதல் உள்ளது. ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரிக் இ தாலிபான்கள், பாகிஸ்தான் ராணுவத்தை பந்தாடி வருகின்றனர்.

மேலும் பாகிஸ்தானுக்குள் குண்டுவெடிப்பு, தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனை பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. தெஹ்ரிக் இ தாலிபான்கள் உடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கி வருகிறது.

அதேவேளையில் நம் நாட்டுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானை குறிவைத்து செயல்படும் அமைப்புகளை நம் நாடு இயக்கவில்லை. இதனை பலமுறை நம் நாடு உறுதியாக தெரிவித்து விட்டது. இருப்பினும் பாகிஸ்தானை தாக்கும் அமைப்புகளை இந்தியா தான் இயக்குவதாக மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் புலம்பி வருகிறது.

பாகிஸ்தான் தாங்குமா?

அந்த வகையில் இப்போதும் பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா ஆசிஃப் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதல் விவகாரத்தில் தேவையின்றி ஆதாரமற்றை குற்றச்சாட்டை நம் நாடு மீது முன்வைத்துள்ளார். மேலும் போர் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மிரட்டி உள்ளார். நம் நாட்டை பொறுத்தவரை போரை விரும்பாது. அதேவேளையில் பாகிஸ்தான் வாலாட்டினால் நிச்சயம் அந்த நாட்டை பந்தாடும் என்பதில் துளியும் ஐயமில்லை.

மேலும் பாகிஸ்தானை எடுத்து கொண்டால் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளது. நாட்டின் பல இடங்களில் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இப்படியான சூழலில் ஆப்கானிஸ்தான் மட்டுமின்றி இந்தியாவுடன் மோதினால் அது பாகிஸ்தானுக்கு தான் பெரிய இழப்பாக மாறும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+