எபோலா வைரஸ் என்ற 'ஆயுதத்தை' கையில் எடுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள்?

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் எபோலா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி அதன் மூலம் அவர்கள் மேற்கத்திய நாடுகளில் நாச வேலையில் ஈடுபட திட்டமிடுவதாக ராணுவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தாக்கி இதுவரை 4 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். மேலும் அமெரிக்காவுக்கு சென்ற இடத்தில் எபோலா காய்ச்சலுக்கு லைபீரியர் ஒருவர் பலியானார். எபோலா மிகப் பெரிய அச்சுறுத்தலாக மாறி வருவதால் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தவறு என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

IS terrorists considering turning themselves into Ebola suicide 'bombs'?

இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்று எபோலா வைரஸ் தாக்குதலுக்குள்ளாகி அதன் பிறகு மேற்கத்திய நாடுகளில் அவர்கள் அதை பரப்ப திட்டமிட்டுள்ளதாக ராணுவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹம் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் உளவுப் பிரிவு துறையின் தலைவர் அந்தோணி கிளீஸ் கூறுகையில்,

ஐ.எஸ். தீவிரவாதிகள் எபோலா வைரஸை தங்கள் நாச வேலைக்கு பயன்படுத்தக்கூடும். தீவிரவாதிகள் தற்கொலை செய்வதில் நம்பிக்கை கொண்டவர்களாக உள்ளனர். அதனால் அவர்களுக்கு எபோலா உகந்ததாக இருக்கும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+