இதப் படிச்சுட்டுப் போய் நீங்க வாந்தி எடுத்தா.. அதுக்கு கம்பெனி பொறுப்பில்லை!
ஜகார்தா: இந்தோனேசியாவில் உள்ள ஒரு மார்க்கெட்டுக்குப் போனால் நிச்சயம் உங்களுக்கு வாந்தி வரும் அல்லது மயக்கம் வரும்.. அதிகபட்சம் தலை சுற்றி பைத்தியமாகக் கூட மாறி விட நேரிடும்... காரணம், அந்த மார்க்கெட்டில் எலிகளையும், நாய்களையும், வவ்வால்களையும், குரங்குகளையும் அப்படியே கொன்று, முழு உடம்போடு பொறித்தும், பிரை செய்தும் படு சூடாக விற்று வருகிறார்கள்.
தனித் தனியாக கறி செய்யாமல் அப்படியே முழுசாக அவற்றை பொறித்து சுடச் சுட விற்கிறார்கள். இதை வாங்க அங்கு பெரும் கூட்டமே அலை மோதுகிறது.

என்ன மனிதர்கள் இவர்கள்...
செத்து சுட்ட நிலையில் கிடக்கும் நாய்களையும், எலிகளையும், குரங்குகளையும் பார்ப்போருக்கு படு பாவமாக தோன்றும். இப்படியெல்லாமா மனிதர்கள் கொடூரமாக சாப்பிடுகிறார்கள் என்று அயர்ச்சியும் ஏற்படும்.

அப்படியே சாப்பிடலாமாம்....
அந்த மார்க்கெட் முழுக்க இப்படி நாய்க்கறி, எலிக்கறி, குரங்குக் கறியை பார்க்கலாம். கட்டித் தொங்க விட்டுள்ளனர் கடை கடையாக. அவற்றை முழுமையாக சுடப்பட்டு, பொறிக்கப்பட்ட நிலையில் வாங்கிச் செல்லலாம். வாங்கி அப்படியே சாப்பிடலாம்.

கோழிக்கறியெல்லாம் ஜுஜூபி...
டொமோஹான் மார்க்கெட் என்பதற்கு அதற்குப் பெயர். இந்தோனேசியாவின் வடக்கு சலுவேசி என்ற மகாணத்தில் அது உள்ளது. வவ்வால், நாய், பூனை, பன்றி, எலிகள், பெரிய பெரிய பாம்புகள் என இங்கு கிடைக்காத விலங்குக் கறியே இல்லை. ஆடு, கோழியெல்லாம் இவர்களுக்கு ஜுஜுபியாகும்.

பயங்கரமா கருப்பா....
இந்தக் கடைகளில் காணப்படும் விலங்குகளை ஓமன் நாட்டைச் சேர்ந்த பிளாக்கர் மற்றும் புகைப்படக்காரர் ரேமாண்ட் வால்ஷ் படம் பிடித்து அதிர வைத்துள்ளார். பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது இந்த விலங்குக் கறி.

திகில் கடைகள்....
இதுகுறித்து வால்ஷ் கூறுகையில், வழக்கமாக நாம் காய்கறிக் கடைகளில் விதம் விதமான காய்கறிகளை தொங்க விட்டிருப்பதை, குவித்து வைத்திருப்பதைப் பார்ப்போம். ஆனால் இங்கு அதே போல நாய்களையும், பூனைகளையும், குரங்குளையும் கொன்று குவித்து வைத்துள்ளனர். பார்க்கவே திகிலாக இருக்கிறது என்றார்.

இங்கப் பார்க்கலாம்...
தனது www.manonthelam.com என்று பெயரிலான பிளாக்கில் இதுகுறித்த புகைப்படங்களையும், கதைகளையும் அவர் போட்டு வைத்துள்ளார்.

மரண பயத்தில் நாய்கள்....
இறந்த விலங்குகள் ஒரு பக்கம் கறியாகிக் கிடக்க மறுபக்கம் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நாய்கள், பூனைகள், குரங்குகளைப் பார்க்கவே பயங்கரப் பரிதாபமாக இருந்ததாகவும் வால்ஷ் குறிப்பிடுகிறார்.

நாய்க்கறி சூப்பர்...
வால்ஷ் மேலும் கூறுகையில் மேற்கத்திய நாடுகளில் நாய்களை செல்லப் பிராணிகளாகப் பார்க்கிறார்கள். பல நாடுகளிலும் கூட அப்படித்தான். ஆனால் இந்தோனேசியாவிலும், தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் நாய் விரும்பி சாப்பிடப்படும் உணவாக உள்ளது. இது கலாச்சார வித்தியாசமாகும் என்றார்.

நாய் ரோஸ்ட்...
வால்ஷ் தொடர்ந்து கூறுகையில், அனைத்து விலங்குகளையும் முதலில் கொல்கிறார்கள். பின்னர் தோலை உரித்து அப்படியே நெருப்பில் இட்டு ரோஸ்ட் செய்து விடுகிறார்கள். முழு உடம்போடு பின்னர் விற்பனை செய்கிறார்கள்.

என்னக் கொடுமை சார் இது....
குரங்குகள், பூனைகள் போன்றவற்றை துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்களாம். வவ்வால், எலி ஆகியவற்றை தலையை நசுக்கிக் கொல்கிறார்கள். அல்லது மரம் அல்லது டேபிளில் தலையை ஓங்கி அடித்துக் கொல்கிறார்களாம். பன்றிகளை மரக்கட்டையால் அடித்தே கொல்கிறார்கள் என்று கூறி நிறுத்தினார் வால்ஷ்.
படிக்கப் படிக்க உவ்வ்வே.. வருது!!!
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications