224 பேருடன் பயணித்த ரஷ்ய விமானத்தை சுட்டு வீழ்த்தினோம்- ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவிப்பு!!
கெய்ரோ: எகிப்தில் இருந்து 224 பேருடன் புறப்பட்ட ரஷ்யா பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து 224 பேருடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்துக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. ஆனால் எகிப்தின் ஷினாய் தீபகற்ப பகுதியில் அது தொடர்பிழந்தது.

இதன் பின்னர் அந்த விமானம் நடுவானில் வெடித்து சிதறி விழுந்ததாகவும் அதில் பயணித்த 224 பேரும் உயிரிழந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த விபத்துக்கு காரணம் தொழில்நுட்பக் கோளாறுதான் என்று முதலில் கூறப்பட்டது.
ஆனால் தற்போது இந்த விமானத்தை தாங்கள்தான் சுட்டு வீழ்த்தியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் அறிவித்துள்ளனர்.
224 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்திருப்பதாக வெளியான தகவல் உலக நாடுகளை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த தகவலை ஏற்க ரஷ்யா மறுக்கிறது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்கி தங்கள் விமானம் தகர்க்கப்பட்டதற்கான ஆதாரமில்லை என்று ரஷ்யா அறிவித்துள்ளது. எனவே ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது எப்படி? என்பதில் மர்மம் நீடிக்கிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications