ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் "கோழி குண்டு"!
பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடைப்பிடித்து வரும் நூதனமான தற்கொலைப் படைத் தாக்குதல் குறித்த விவரம் வெளியாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது. இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபடுவது மனிதர்கள் அல்ல.. மாறாக கோழிகள்.
ஆம், கோழிகளை அவர்கள் தற்கொலைப் படை போல பயன்படுத்தி வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது கோழிகளின் உடம்பில் வெடிகுண்டைக் கட்டி அதை எதிரிகளின் முகாமுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கோழி உள்ளே போனதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் அந்தக் குண்டை வெடிக்கச் செய்து சேதத்தை ஏற்படுத்துகின்றனர். இப்படி கோழி குண்டு மூலம் ஐஎஸ்ஐஎஸ் தாக்குவது அதிகரித்து வருகிறதாம். இதற்கு நல்ல பலன் இருப்பதால் இதைத் தொடர்ந்து அவர்கள் செய்து வருகின்றனர்.

சிக்கல் மிச்சம்
மனிதர்களை தற்கொலைப் படைத் தீவிரவாதியாக அனுப்புவதில் பல சிக்கல்கள் இருப்பதால் செலவே இல்லாமல் கோழிகளை தற்கொலைப் படையாக பயன்படுத்தி வருகிறதாம் ஐஎஸ் அமைப்பு.

வெடிகுண்டுக் கோழிகள்
தற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பிடித்து வரும் கோழிகளை நன்கு பழக்கி பின்னர் உடலில் வெடிகுண்டைக் கட்டி விடுகின்றனர். அதன் பின்னர் அதை எதிரி முகாமுக்குள் அனுப்பி வைத்து ரிமோட் மூலம் வெடிக்கச் செய்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

சமூக வலைதளங்களில் புகைப்படம்
கோழிகள் உடம்பில் வெடிகுண்டை கட்டுவது போன்ற படமும் வெளியாகியுள்ளது. இதை வெளியிட்டது யார், இது உண்மையா, பொய்யா என்பது தெரியவில்லை. ஆனால் ஒரு இங்கிலாந்து ராணுவ வீரர் இதுதொடர்பாக கூறியுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கதாக உள்ளது.

என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்
குர்திஷ் படையினருடன் இணைந்து தீவரவாதிகளுக்கு எதிராக போராடி வரும் படையில் உள்ளவரான அவர் கூறுகையில், ஐஎஸ் தீவிரவாதிகள் என்னெல்லாம் வழி உள்ளதோ அதையெல்லாம் கடைப்பிடிக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு லாஜிக் எல்லாம் கிடையாது. மனிதர்களையே தாறுமாறாக வெட்டிக் கொள்ளும் அவர்களுக்கு விலங்குகள் மீது சற்றும் பாசம் வர வாய்ப்பில்லை என்றார்.
ரொம்பக் கொடூரமாகத்தான் இருக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications