வங்கதேசத்தில் ஆங்கில பேராசிரியரை அரிவாளால் வெட்டிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
டாக்கா: வங்கததேசத்தில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள ராஜ்ஷாஹி நகரில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் ஆங்கில பேராசிரியராக இருந்தவர் ரிசாவுல் கரீம் சித்திக்(58). அவர் தனது வீட்டில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். இதில் சித்திக் பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறுகையில்,
சித்திக்கின் கழுத்தில் மட்டும் 3 வெட்டுகள் விழுந்துள்ளது. அவரது கழுத்து 80 சதவீதம் அறுபட்டு இருந்தது. இந்த தாக்குதல் பாணியை பார்த்தால் இதை தீவிரவாதிகள் தான் செய்திருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். இசையில் ஈடுபாடு உள்ள சித்திக் பாக்மாராவில் இசை பள்ளியை துவங்கி நடத்தி வந்துள்ளார் என்றனர்.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. வங்கதேசத்தில் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து மதச்சார்பற்ற பிளாக்கர்களை உள்ளூர் இஸ்லாமிய போராளிகள் கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications