தாடியை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடையணிந்து ரமாதியில் இருந்து தப்பிக்க முயன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பாக்தாத்: ஈராக்கில் உள்ள ரமாதி நகரில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் சிலர் தாடி, மீசையை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து தப்பியபோது ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
ஈராக்கில் உள்ள அன்பார் மாகாண தலைநகரான ரமாதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வசம் இருந்தது. இந்நிலையில் ஈராக் ராணுவத்தினர் தீவிரவாதிகளுடன் போராடி
அந்நகரை மீட்டனர். ரமாதி நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து முழுமையாக மீட்டுவிட்டதாக ராணுவத்தினர் கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிப்பு வெளியிட்டனர்.

ராணுவத்தினர் நகரில் இருக்கும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் ரமாதி நகரை விட்டு தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை அன்று 9 தீவிரவாதிகள் தாடி, மீசையை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து ரமாதி நகரில் இருந்து தப்பிச் செல்ல பார்த்தனர். சோதனைச்சாவடி அருகே அவர்களை ராணுவத்தினர் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இது குறித்து ராணுவத்தினர் கூறுகையில்,
தீவிரவாதிகள் தாடியை எடுத்துவிட்டு பெண்கள் போன்று உடை அணிந்து எங்களை ஏமாற்ற நினைத்தனர். ஆனால் அவர்கள் நகரில் இருந்து தப்பியோடும் முன்பு அவர்களை பிடித்துவிட்டோம் என்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications