சிரியாவில் 25 ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்ற சிறுவர்கள்: ஐஎஸ்ஐஎஸ் 'திடுக்' வீடியோ
ராக்கா: சிரியாவில் உள்ள பால்மிரா நகரில் 25 ராணுவ வீரர்களை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த சிறுவர்கள் சுட்டுக் கொலை செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

சிரியாவில் உள்ள பால்மிரா நகரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த மே மாதம் கைப்பற்றினர். இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பால்மிரா நகரில் வைத்து சிரியா ராணுவ வீரர்கள் 25 பேரை கொலை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் ராணுவ வீரர்களின் கைகள் கட்டப்பட்டு வரிசையாக மண்டியிட வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பின்னால் பதின்வயதில் இருக்கும் 25 சிறுவர்கள் கையில் துப்பாக்கியுடன் நிற்கிறார்கள். முகத்தை கருப்புத் துணியால் மறைத்திருக்கும் சிறுவர்கள் தீவிரவாதி ஒருவர் கூறியதும் ராணுவ வீர்களை தலையில் சுட்டுக் கொன்றனர்.
இந்த சம்பவம் யுனெஸ்கோ பாரம்பரிய தலமான பால்மிரா நகரில் நடந்துள்ளது. பால்மிரா நகரை கைப்பற்றியதும் தீவிரவாதிகள் அங்கிருந்த அருங்காட்சியகத்திற்குள் புகுந்து பழமை வாய்ந்த சிலைகள் பலவற்றை உடைத்து சேதப்படுத்தினர்.
25 ராணுவ வீரர்கள் பால்மிரா நகரில் உள்ள ரோமன் ஆம்ஃபிதியேட்டரில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக அதே இடத்தில் வைத்து தான் தீவிரவாதிகள் 20 ஆண்களை கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications