முடியல, வீட்டுக்கு வருகிறோம்: ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த ஆஸ்திரிய சிறுமிகள்
வியன்னா: போராளி மணப்பெண்களாக மாற சிரியா சென்ற இரண்டு ஆஸ்திரிய சிறுமிகள் தற்போது வீட்டுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்து போராளி மணப்பெண்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறுமிகள் சிரியா, துருக்கி செல்கிறார்கள். அப்படி தான் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சபினா செலிமோவிக்(15), சம்ரா கெசினோவிக்(17) ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி துருக்கி சென்றனர். தங்களை யாரும் தேட வேண்டாம் என்றும், அல்லாஹ்வுக்காக சேவை செய்து மரணமிக்க விரும்புவதாகவும் அவர்கள் கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றனர்.
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்த அந்த சிறுமிகளின் புகைப்படங்களை தீவிரவாதிகள் போஸ்டர்களில் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சபினா மற்றும் சம்ரா தங்கள் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு வீட்டுக்கு திரும்பி வர விரும்புவதாக தெரிவித்துள்ளனர் என்று ஆஸ்திரிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால் ஐஎஸ் தீவிரவாதி அமைப்பில் இருந்து தப்பித்து வரும் கடினமான விஷயம் என்று ஆஸ்திரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆஸ்திரிய ஊடகங்களில் கூறியிருப்பதாவது,
சபினா மற்றும் சம்ரா செசன்ய தீவிரவாதிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது கர்ப்பமாக இருக்கலாம். அவர்கள் தப்பித்து வந்தாலும் வெளிநாட்டு போரில் கலந்து கொள்ள சென்றவர்கள் நாடு திரும்ப ஆஸ்திரிய சட்டம் அனுமதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியன்னாவில் வளர்ந்த சபினா, சம்ரா போன்று சுமார் 130 ஆஸ்திரியர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications