'கே' என்பதால் 4 ஆண்களை மாடியில் இருந்து தள்ளிக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
ராக்கா: சிரியாவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 4 ஆண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 5 அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.
ஈராக் மற்றும் சிரியாவில் தாக்குதல் நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கைக்கு எதிரானவர்கள். இந்நிலையில் சிரியாவில் உள்ள தேர் ஈஸ்ஸோர் நகரில் 4 ஆண்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு வந்தது தீவிரவாதிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து ஓரினச்சேர்க்கையில் இனி யாரும் ஈடுபடாத வண்ணம் இருக்கும் வகையில் அந்த 4 பேரையும் தண்டிக்க தீவிரவாதிகள் முடிவு செய்தனர்.

தீவிரவாதிகள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அந்த 4 பேரையும் பிடித்து 5 அடுக்குமாடி கட்டிடத்தின் மொட்டைமாடிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அந்த 4 பேரின் கை, கால்களை கட்டி அவர்களின் கண்களில் துணியை கட்டினர். பின்னர் 4 பேரையும் ஒவ்வொருவராக தூக்கி கீழே வீசினர். 4 பேரும் தரையில் விழுந்து பலியாகினர்.

இந்த கொடூர சம்பவத்தை நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். முன்பும் கூட பல ஓரினச்சேர்க்கையாளர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர்.
இந்த மாத துவக்கத்தில் ஓரினச்சேர்க்கையாளர் ஒருவரை தீவிரவாதிகள் அடுக்குமாடி கட்டிடத்தின் உச்சியில் இருந்து தள்ளி கொலை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications