Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் கதை முடியுது? ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்.. மத்திய கிழக்கில் உருவாகும் புதிய‛நேட்டோ’ படை

Subscribe to Oneindia Tamil

ரியாத்: மத்திய கிழக்கில் யூத நாடாக உள்ள இஸ்ரேல், இஸ்லாமிய நாடுகளை தாக்கி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா மீதான போர் மற்றும் கத்தார் மீதான தாக்குதல் உள்ளிட்டவற்றால் இஸ்லாமிய நாடுகள் கடும் கோபமடைந்துள்ளன. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கு ‛செக்' வைக்க இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதோடு, ‛நேட்டோ' போன்று கூட்டு படையை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளாக மொத்தம் 16 நாடுகள் வகைப்படுத்தப்படுகிறது. அதில் சவுதி அரேபியா, ஈராக், ஈரான், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஜோர்டான், சிரியா, ஏமன், லெபனான், இஸ்ரேல், பாலஸ்தீனம், ஓமன், கத்தார், குவைத், பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளாக உள்ளன.

Saudi Arabia Israel NATO

இதில் இஸ்ரேல் மட்டும் யூதர்களின் நாடாக உள்ளது. மற்ற அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடுகளாக உள்ளன. இதில் இஸ்ரேலை தவிர்த்து மற்ற நாடுகள் அரபு நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் இஸ்ரேலுக்கும் அதனை சுற்றி இருக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நிலவி வருகிறது. சுமூக உறவு என்பது இல்லை.

தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் காசாவில் போர் புரிந்து வருகிறது. சமீபத்தில் ஹெஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனானை அட்டாக் செய்தது. அதன்பிறகு ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. அந்த வரிசையில் சமீபத்தில் இஸ்ரேல் சீண்டிய நாடு தான் கத்தார். கத்தார் தலைநகர் தோஹாவில் சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் தனது போர் விமானங்கள் மூலமாக அதிரடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப்பை சேர்ந்த தலைவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இப்படி இஸ்ரேல் தொடர்ந்து ஒவ்வொரு இஸ்லாமிய நாடுகளையும் குறிவைத்து தாக்கி வருகிறது. இதனை பிற இஸ்லாமிய நாடுகள் வெறும் கண்டிப்புடன் நிறுத்தி விடுகின்றன. மேற்கொண்டு இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் எதையும் நடத்துவது இல்லை. இது ஒருபுறம் இருக்க இஸ்ரேல் பாதுகாப்பு துறையில் சிறந்து விளங்குகிறது. பல புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறது. இதனால் இஸ்ரேலை சீண்டினால் எங்கே நமக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சமும் பல இஸ்லாமிய நாடுகளிடம் உள்ளது.

ஏனென்றால் மத்திய கிழக்கில் இஸ்ரேல் போன்று வேறு எந்த நாடுகளும் ராணுவம், விமானப்படையில் பலம் வாய்ந்ததாக இல்லை. இதனால் இஸ்ரேல் தொடர்ந்து ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. அதுமட்டுமின்றி இஸ்லாமிய நாடுகள் இடையே சியா - சன்னி இஸ்லாமியர் பிரச்சனை, வர்த்தகம் சார்ந்த பிரச்சனை, சவுதி அரேபியா - ஈரான் இடையே யார் பெரியவர்கள் என்ற ஆதிக்க போட்டி, அமெரிக்காவுடனான நட்பு ஒருபுறம், அமெரிக்காவுடனான எதிர்ப்பு மறுபுறம் என்று பல நாடுகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் உள்ளன.

இதனால் மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமை என்பது இன்னும் வரவில்லை. இப்படியான சூழலில் தான் கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இஸ்லாமிய நாடுகளின் ஒருங்கிணைப்பு பணிக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்து வருகிறது. கத்தார் மீதான தாக்குதலால் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளும் இஸ்ரேலை கண்டித்தன. இது வெறும் கண்டிப்புடன் நிற்காமல் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கி உள்ளது.

அதாவது இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர தொடங்கி உள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து ‛நேட்டோ' படையை உருவாக்கி வைத்துள்ளது போல் புதிய படையை அமைக்க திட்டமிட்டுள்ளன. நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் உள்பட மொத்தம் 32 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் படை வீரர்கள் நேட்டோவில் இருப்பார்கள். நேட்டோ நாடுகள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் உடனடியாக அனைத்து நாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்கும். அந்த வகையில் தான் ‛நேட்டோ' நாடுகளை யாரும் சீண்டுவது இல்லை.

இப்படியான சூழலில் தான் ‛நேட்டோ' போன்று ஒரு கூட்டுப்படையை மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேலுக்கு எதிராக அமைக்க இஸ்லாமிய நாடுகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளது. இதனை சிஎன்என் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛கத்தாரின் தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய மறுநாளே ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபர் முகமது பின் ஜயாத் அல் நஹ்யான் தோஹா சென்றார். அதன்பிறகு அவர் பக்ரைன் மற்றும் ஓமன் நாடுகளுக்கு சென்றார். இந்த வேளையில் நேட்டோ போன்று மத்திய கிழக்கில் கூட்டு படையை உருவாக்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இதுபற்றி கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி கூறுகையில், ‛‛விரைவில் தோஹாவில் அரபு இஸ்லாமிய நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கூட்டு படை அமைப்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.

மேலும் இஸ்லாமிய நாடுகள் நேட்டோ போன்ற கூட்டு படையை அமைக்க திட்டமிட்டாலும் அதனை செயல்படுத்துவதில் பிரச்சனைகள் வரலாம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் அமெரிக்கா இதனை ஒப்புக்கொள்ள வாய்ப்பு இல்லை. இதற்கு அமெரிக்கா - இஸ்ரேல் நட்பு தான் முக்கிய காரணம். இஸ்ரேல் பாசத்தில் அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளை பிரிக்கும் வேலையில் ஈடுபடலாம்.

2வது விஷயம் என்னவென்றால் மத்திய கிழக்கில் பல நாடுகள் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டவை. பல நாடுகளிடம் பொருளாதாரம் நல்ல நிலையில் இல்லை. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நாடுகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருக்கின்றன. பல நாடுகளில் தனித்தனியே ஆயுதகுழுக்கள் உள்ளன. உள்நாட்டு போர், இந்த ஆயுத குழுக்களின் ஆதிக்கம் உள்ளிட்டவற்றை தாண்டி இஸ்லாமிய நாடுகள் நேட்டோ போன்ற கூட்டு படையை அமைப்பது அவ்வளவு சுலபமானது இல்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள்.

ஒருவேளை இந்த தடைகளை தாண்டி மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகள் நேட்டோ போன்ற கூட்டு படையை உருவாக்கினால் அது இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையாக மாறும். ஏனென்றால் அந்த பிராந்தியத்தில் இஸ்லாமிய நாடும் மத்திய கிழக்கில் பிரிந்து கிடப்பது
தான் இஸ்ரேலுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்டாக உள்ளது. ஒருவேளை அனைத்து இஸ்லாமிய நாடுகளும் ஒன்றிணையும் பட்சத்தில் அது இஸ்ரேலுக்கு சிக்கலாக மாறலாம். இதனால் இந்த விவகாரத்தை இஸ்ரேல் உன்னிப்பாக கண்காணிக்க தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+