பேஜர் அட்டாக்கை தொடர்ந்து.. வான்வழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்! லெபனான் மீது குண்டு மழை
பெய்ரூட்: பாலஸ்தீனத்தை தொடர்ந்து, ஹிஸ்புல்லா குழுக்கள் உள்ள லெபனான் மீது அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியுள்ள இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு முழுவதும் போர் தொடரும் அச்சம் எழுந்திருக்கிறது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், இதற்கு அந்நாடு பதிலடி கொடுப்பதும் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்கையில், 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம், பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை தொடுத்தது. இதில் 1000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தாக்குதல்தான் தற்போது நடக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீன போருக்கான தொடக்கப்புள்ளி.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தீவிர போரை அறிவித்தது இஸ்ரேல். இந்த போரில் இது வரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பசியும், சுகாதார பாதிப்புகளும் பாலஸ்தீன மக்களை துரத்திக்கொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தினால், அண்டை இஸ்லாமிய நாடுகள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. குறிப்பாக லெபனானிலிருந்து இயங்கி வரும் ஹில்புல்லா அமைப்பு, இந்த போரின் போக்கையே மாற்றும் அளவுக்கு தலையீடு செய்தது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா தொடர் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. ஒரு கட்டத்தில் ஹமாஸை கூட சமாளித்துவிடலாம் போல.. ஆனா ஹிஸ்புல்லாவை சமாளிப்பது தலைவலியாக இருக்கிறது என்பதை இஸ்ரேல் உணர்ந்துக்கொண்டது.
ஆனால், அதிகாரப்பூர்வமாக லெபனான் மீது இஸ்ரேலால் போரை தொடுக்க முடியாது. அப்படி செய்தால் ரஷ்யா இந்த போரில் தலையிட தொடங்கிவிடும். இது மட்டும் நடந்தால், இஸ்ரேலின் கதை மொத்தமாக முடிந்துவிடும். எனவே, என்ன செய்யவது என்று யோசித்து வந்த இஸ்ரேல் தற்போது பேஜர் தாக்குதலை நடத்தியிருக்கிறது.
நவீன டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்திலும், ஹிஸ்புல்லாக்கள் பேஜர்களைதான் தற்போதுவரை பயன்படுத்தி வருகிறார்கள். காரணம், இதனை ஹேக் செய்ய முடியாது. செல்போனை ஹேக் செய்து, இருப்பிடத்தை துல்லியமாக கண்டுபிடித்துவிட முடியும். ஆனால், பேஜரில் அப்படி செய்ய முடியாது. இருப்பினும் இந்த பேஜரை மொத்தமாக கொள்முதல் செய்த இடத்தில் சில தில்லு முல்லு வேலைகள் நடந்திருக்கின்றன.
இந்த பேஜர்கள் ஹங்கேரியில்தான் அசெம்பிள் செய்யப்பட்டிருக்கின்றன. இப்படி செய்யும்போது வெடிபொருட்கள் இதனுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் இஸ்ரேல் இதை வெடிக்க செய்திருக்கிறது. பேஜர் மட்டுமல்லாது வாக்கி டாக்கி, செல்போன், சோலார் பேனலுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி என அனைத்தும் வெடித்து சிதறியுள்ளன. இந்த தாக்குதலில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இப்படி எல்லா எலக்ட்ரிக் சாதனங்களும் வெடித்து சிதறிய நிலையில், அடுத்து எது வெடிக்குமோ? என்கிற அச்சத்தில் லெபனான் இருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போரை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது இஸ்ரேல்.
நேற்று இரவும் இன்று அதிகாலையும் தெற்கு லெபனான் பகுதியில் உள்ள மோன்சுரி என்ற இடத்தின் மீது போர் விமானங்கள் மூலம் இஸ்ரேல் குண்டுகளை வீசி உள்ளது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 1000 ராக்கெட் லாஞ்சர்களை இஸ்ரேல் அழித்திருப்பதாக கூறியுள்ளது.
போர் தொடங்கினால் ரஷ்யாவின் தலையீடு இருக்கும் என்று இஸ்ரேலுக்கு தெரியும். இருப்பினும் அமெரிக்காவின் சப்போர்ட் காரணமாக இஸ்ரேல் துணிச்சலாக போரை தொடங்கி வைத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications