பங்கரில் பதுங்குங்கள்.. குழிகளை விட்டு வெளியே வர வேண்டாம்.. சொந்த குடிமக்களுக்கு இஸ்ரேல் உத்தரவு!
ஜெருசலேம்: இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர தாக்குதல் நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்து இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுமாறு இஸ்ரேலியர்களுக்கு உத்தரவு
இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஈரான் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இஸ்ரேலியர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை அதிகாலை முதலே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
மேலும், அனைத்து பொது இடங்களிலும் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற அலுவலகங்கள் அனைத்தும் வெள்ளக்கிழமை மூடப்பட்டிருக்கும். நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பான அறைகள் அல்லது கட்டிடங்களில் உள்ள பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று உள்துறை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. அப்படி இல்லாதவர்கள் பொது பதுங்கு குழிகளை பயன்படுத்தலாம். எதுவுமே கிடைக்காத பட்சத்தில் மாடிப்படிகளில் தஞ்சம் அடையலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவுகள் நாளை இரவு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலின் வான்வெளி மூடப்பட்டதால், எல் அல் விமான நிறுவனம் தனது விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
முக்கிய நிகழ்வுகள்
இஸ்ரேல் ஈரான் இரண்டு நாடுகளும் சரமாரியாக மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் போர் உச்சம் அடைந்து உள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் ஏவுகணை அட்டாக் நடத்தி உள்ளது. இதன் மூலம் 2 நாட்களில் 3வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் "ஆபரேஷன் ரைசிங் லயன்" என்ற பெயரில் ஈரான் மீது ஒரு பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நேற்று இரவு நடத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது வெள்ளிக்கிழமை அதிகாலை தெஹ்ரான் மற்றும் நடான்ஸ் அருகே உள்ள ஈரான் நாட்டின் சர்ச்சைக்குரிய அணுசக்தி திட்டத்தின் மையப்பகுதிகளை குறிவைத்து நடத்தப்பட்டது.
ஆரம்ப அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி மேஜர் ஜெனரல் ஹொசைன் சலாமி மற்றும் தலைமை அதிகாரி முகமது பாகேரி உட்பட பல உயர்மட்ட ஈரான் இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத இஸ்ரேல் தொடங்கி உள்ளது. இந்த தாக்குதல்கள், ஈரானின் அணு உலைகள், ராணுவத் தளபதிகள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை குறி வைத்தன. இந்த தாக்குதலில் 78 பேர் கொல்லப்பட்டனர், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐ.நா.வுக்கான ஈரான் தூதர் தெரிவித்தார். இதற்குப் பதிலடியாக டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ஏவுகணைகளை ஏவியது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார், 34 பேர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலைக்குள் இரு நாடுகளும் வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தின. இதனால் முக்கிய நகரங்களில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை ஒலித்தது. வெடிப்புகளும் நிகழ்ந்தன.
-
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்! -
14 பாயின்ட்.. மொத்த போரும் முடிவுக்கு வந்தது.. கதவை திறங்க, கப்பல் கிளம்பட்டும்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
விடியல் பிறக்கிறது.. ஈரான் போர் முடிவு.. டிரம்ப் உடன் ராசியான முஜ்தபா கமேனி.. இவரே சொல்லிட்டாரா? -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
சுந்தர் பிச்சைக்கு எதிர்ப்பு! பேசிக்கொண்டிருக்கும்போதே.. சாரை சாரையாக வெளியேறிய மாணவர்கள்! -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன?












Click it and Unblock the Notifications